செவ்வாய், 3 பிப்ரவரி, 2015

பெண்கள் அழகுடன் மிளிர!

பெண்கள் அழகுடன் மிளிர!
ஒவ்வொரு உடல் அமைப்பும் அவர்கள் அழகை பொறுத்தது. சிலர் இயற்கையாகவே அழகாக இருப்பார்கள். அந்த அழகை அவர்களுக்கு பராமரிக்க தெரிய வேண்டும்.
நிறையபேர் அழகு என்பது முகத்துடன் முடிந்து விடுகின்றது என நினைக்கிறார்கள். இது மிக தவறான எண்ணம். அழகு என்பது தலைமுடி முதல் கால் நகம் வரை உள்ளடக்கியது. ஒவ்வொருவருக்கும் ஒரு வித அழகு உண்டு. அடர்ந்த கூந்தல் ஒருவருக்கு என்றால் குழல் குழலாய் சுருண்ட கூந்தல் இன்னொருவருக்கு.
நாம் கருப்பாக இருக்கிறோமே என்று பல பெண்கள் வருத்தப்படுவது மிக தவறு. கருப்பு ஒரு அழகிய நிறம். நம்முடைய உடலமைப்பிற்கும், சரும நிறத்திற்கும் ஏற்றவாறு தலை முதல் குதிகால் வரை அலங்கரித்து கொள்வதே சிறப்பு.
அழகை பராமரிக்க தேவை மூன்று விஷயங்கள்...

1. ஆரோக்கியம்:
நல்ல சத்துள்ள உணவு. கீரை, பச்சை காய்கறிகள், பழங்கள் இவற்றினால் நம் ஆரோக்கியம் சிறப்படையும். அளவான உணவு தேவையான உறக்கம் என்று ஒரு சிரான நிலை இருந்தால் நம் ஆரோக்கியம் நமக்கு அழகை பெற்றுத் தரும். இதற்கு நீங்கள் தனியாக ரெடி செய்ய வேண்டியதில்லை. உங்கள் உணவு வழக்கங்களை சற்றே மாற்றி கொண்டால் போதும். கொழுப்பு சத்துமிக்க உணவுகளை தவிர்த்து நார்ச்சத்து உள்ள உணவுகளை உட்கொள்ளுங்கள். பணமும் மிச்சம். பலனும் பெருகும்.
2. சுத்தம்:
சுத்தம் சோறு மட்டும் போடாது. நல்ல அழகையும் போடும். மஞ்சள் நல்லெண்ணை சந்தனம், கடலைமாவு பயத்தமாவு, பால் ஏடு, மருதாணி, செம்பருத்தி, நாமக்கட்டி, தேன், சில கீரை வகைகள் எல்லாம் அழகை பெற நம் பெண்கள் தொன்று தொட்டு பயன்படுத்தி வருபவை.
இரு வேளைகளிலும் குளிர்ந்த நீரில் குளிப்பது, கூந்தலை சுத்தமாக வைத்துக் கொள்வது, ஆடைகளை நன்கு தேய்த்து அணிவது, கைகால் நகங்களை சரியாக பாராமரிப்பது போன்றவை, சுத்தத்தை அதிகரித்து அழகை மேம்படுத்தும்.
3. உடற்பயிற்சி:
தினமும், ஒரு பத்து நிமிடம் உடற்பயிற்சி செய்வதனால் ரத்த ஓட்டம் அதிகரித்து நாள் முழுவதும் உற்சாகமாகவும், சுறுசுறுப்பாகவும் இயங்க முடியும். மாவு அரைத்தல், பெருக்கி துடைத்தல், துணி தேய்த்தல் போன்ற வேலைகளை நாம் சுறுசுறுப்பாக செய்ய உடற்பயிற்சி அவசியம் தேவை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக