பாட்டி வைத்தியம் [சில குறிப்புகள்]

ஆரோக்கியமான உணவுகள் போனது!
ஆபத்தான உணவுகள் வந்தது!
ஆரோக்கியம் உங்கள் கையில்!!
பாட்டி வைத்தியம் [சில குறிப்புகள்]
கொண்டைக்கடலையில் புரதம், கலோரி, நார்ச்சத்து, மாவுச்சத்து போன்றவை காணப்படுகிறது.
மேலும் பாஸ்பரஸ், இரும்பு, கால்சியம், மெக்னீசியம், சோடியம், பொட்டாசியம்,
துத்தநாகம், தாமிரம் ஆகியவை அதிக அளவில் நிறைந்துள்ளன. உடலில் இருக்கும்
கொழுப்பை குறைக்க முளைக்கட்டிய கொண்டைக்கடலையில்
இருக்கும் ஹார்மோன் பெரிதும் உதவுகிறது. நீரிழிவு இருப்பவர்கள்
சாப்பிட கூடிய உணவு. கொழுப்பு மிக குறைந்த அளவே காணப்படுகிறது.
குறிப்பாக வெள்ளை கொண்டைக்கடலையை விட
கருப்பு கொண்டைக்கடலையில் அதிக அளவில் நார்ச்சத்து காணப்படுகிறது.



அவலில் கலோரிகள் அதிகம் காணப்படுகிறது. மேலும் கார்போஹைட்ரேட்,
புரதம், சர்க்கரை, ஃபைபர், சோடியம் மற்றும் பொட்டாசியம் ஆகியவை காணப்படுகிறது.
பித்தத்தை குறைக்கும். வயிற்று வலி, வயிற்றுப்போக்கு போன்றவை குணமாகும்.
சோர்வை குறைத்து உடலுக்கு வலிமை தரும். அதிகப்படியான எடையை குறைக்கும். உருளைக்கிழங்குகளில் வைட்டமின் A, வைட்டமின் C, வைட்டமின் B6,
தாமிரம், மாங்கனீசு, மற்றும் நார்ச்சத்து அதிகமாக உள்ளது.
உருளைக்கிழங்கு ஆற்றல் உற்பத்திக்கு மிகவும் சிறந்த உணவு.
இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும்.
செரிமானம், வயிற்று புண்கள் மற்றும் இரத்த அழுத்தத்தை குறைக்கிறது.

உளுந்தில் மாவுச்சத்து, புரதச்சத்து, சுண்ணாம்புசத்து,
பாஸ்பரஸ் ஆகியவைகள் அதிகம் காணப்படுகின்றன.
உளுந்தில் குறைந்த அளவு கொழுப்பு மட்டுமே உள்ளது.
இவற்றில் வைட்டமின் “சி” அதிகம் நிறைந்துள்ளது.

உளுந்து எலும்பு மற்றும் நரம்பு வளர்ச்சிக்கு மிக முக்கியத்தும் வாய்ந்தது.
நீரழிவு நோய் மற்றும் வாதநோயைக் கட்டுப்படுத்த வல்லது.
இவற்றை உண்பதால் குறைந்த அளவு கொழுப்பு மட்டுமே உடலில் சேருகிறது.
இதனால் எந்த வித பாதிப்பும் ஏற்படுவதில்லை.

பாசிப்பருப்பில் பொட்டாசியம் , கால்சியம், பாஸ்பரஸ்,
ஸ்டார்ச், கார்போஹைட்ரேட், புரதம் மற்றும் வைட்டமின்கள்
அதிகமாக இருப்பதால் உடல் வளர்ச்சிக்கு உதவுகிறது.
தாதுப்பொருள், நார்ச்சத்து நிறைந்துள்ளது. எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவு.
சருமத்தை பாதுகாக்கிறது. செரிமானத்திற்கும் எளிதாக உள்ளன.
உடல் வெப்பத்தை தணிக்கும். வயிற்று கோளாறுகளை குறைக்கும்.
கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்ற ஊட்டச்சத்து நிறைந்த உணவு.

கருத்துகள்