ஜீரண பிரச்சனைகள்

ஜீரண பிரச்சனைகள்
வாழைப்பழத்தில் அதிகளவு பொட்டாசியம் இருப்பதால், இதில் அமிலகார சமனிலையை உருவாக்கும் கனிமங்கள் அதிகளவில் உள்ளது. அதி களவு, குறைவான அமிலத் தன்மை ஆகிய காரணங்களால் வாழைப்பழம் அசிடிட்டிக்கு ஒரு வலிமையான மாற்று மருந்தாகும்.

மேலும் இரைப்பையின் அக உறையில் சீதத்தன்மையை ஏற்படுத்தும் கூறுகளும் இதில் அடங்கி யுள்ளன. இந்த சீதத்தன்மை, வயிற்றில் அசிடிட்டி மூலம் ஏற்படும் பாதிப்பைக் குறைக்கிறது.


துளசியில் இருக்கும் கூறுகள் செரிமானத்திற்கு பயனுள்ள வையாகும். இது வயிற்றினுள் சீதத்தன்மையை ஊக்குவிப்பதால், புண்கள் ஏற்படாமல் தடுக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது.

இது வயிற்று அமிலங்களின் சக்தியைக் குறைத்து அசிடிட்டியைத் தடுக்க உதவுகிறது. இவை வாயு உருவாக்கத்தையும் குறைக்கும். உடனடி நிவாரணத்திற்கு, உணவு சாப்பிட்ட பின்னர் ஐந்து அல்லது ஆறு துளசி இலைகளை உண்ணுங்கள்.
இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், செரிமானத்தை விரைவுப்படுத்தி அசிடிட்டியைக் குறைக்க உதவும். அசிடிட்டி ஏற்படும் சமயத்தில், அதிகளவு பழுத்த வாழைப் பழத்தை சாப்பிட்டால், விரைவான தீர்வைப் பெறலாம். மேலும் இதில் அதிகளவு பொட்டாசியம் அடங்கிருப்பதால், அசிடிட்டிக்கு நல்ல பயன் கிடைக்கும்.

பாலில் அதிகளவு கால்சியம் அடங்கியிருப்பதால், அமிலத்தைக் கட்டுப்படுத்தும் தன்மை வாய்ந்தது. ஒரு டம்ளர் குளிர்ச்சியான பால், அசிடிட்டி அறிகுறிகளைக் குறைக்கிறது

எப்படியெனில், இதில் உள்ள குளிர்ந்த தன்மை, அசிடிட்டியின் போது ஏற்படும் எரிச்சலைக் கட்டுப்படுத்துகிறது.

அதிலும் குளிர்ந்த பாலை, சர்க்கரை சேர்க்காமல் குடிக்க வேண்டும். குறிப்பாக அதில் ஒரு கரண்டி நெய் சேர்த்து குடித்தால் சிறந்த நிவாரணம் பெறலாம்.
இது பெருஞ்சீரகம் எனவும் அழைக்கப்படும். இது வாய் ப்ரஷ்னராக பயன்படுத்தப்பட்டாலும், இதில் பல மருத்துவ குணங்கள் உண்டு. மலச்சிக்கலைக் நீக்கி, செரி மானத்திற்கு உதவுதல் இதன் ஒரு பண்பாகும். இதில் ப்ளேவோனாய்டுகள், பிளாமிடிக் அமிலம் மற்றும் வேறுபல கூறுகள் இருப்பதால், புண்கள் ஏற்படாமல் தடுக்கும் சக்தி வாய்ந்தது.

இதைத் தவிர, இது வயிற்றின் உட்பகுதியை குளிராக்குவதால், விரைவாக குணமடைய உதவுகிறது. ஆகவே தான் ரெஸ்ட்ராண்ட்டுகளில் சாப்பிட்ட பிறகு சோம்பு வழங்கப்படுகிறது. ஒரு வேளை உங்களுக்கு திடீரென அசிடிட்டி ஏற்பட்டால், கொஞ்சம் சோம்பை தண்ணிரில் கொதிக்க வைத்து, அதை இரவு முழுவதும் ஊறவிட்டு, அந்த நீரைக் குடித்தால் அசிடிட்டியிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.
சீரகத்தில் அதிகப்படியான எச்சிலை உற்பத்தி செய்யும் தன்மை உள்ளது. இது செரிமானத்தை சீராக நடை பெற வைத்து, அதனால் ஏற்படும் பல்வேறு வயிற்று பிரச்சினைகளை சரிசெய்யும். அது மட்டுமின்றி இது வயிற்று நரம்புகளை அமைதிப்படுத்தி, அமிலம் சுரப்பதால் ஏற்படும் புண்களைக் குணப்படுத்த உதவும் என ஆயுர்வேத முறையில் கூறப்படுகிறது.

அதற்கு இதை வாயில் போட்டு மென்று சாப்பிடலாம். அதை விட, நீரில் கொதிக்க வைத்து, ஆறிய பின்னர் அந்த நீரைக் குடிப்பது சிறந்த முறையாகும்.

சளி, பித்தம், வாதம் ஆகிய மூன்று தோஷங் களையும் சரிசெய்யக் கூடிய ஒரே உணவு ஏலக்காய் என ஆயுர்வேத முறையில் கூறப்படுகிறது. இது செரிமானத்தை துரிதப்படுத்தி, வயிற்று வலியைக் குறைக்கும்.

இது இரைப்பையின் உட்பரப்பில் சீத தன்மையை சமப்படுத்தி, வயிற்றில் அதிகளவு அமிலம் சுரப்பத்தால் ஏற்படும் தாக்கத்தை தணிக்கிறது. இதன் இனிப்புச்சுவை மற்றும் குளிராக்கும் தன்மை, அசி டிட்டியின் மூலம் ஏற்படும் எரிச்சலில் இருந்து நிவாரணம் கொடுக்கும்

குறிப்பாக அசிடிட்டியிலிருந்து நிவாரணம் பெறுவதற்கு, கொஞ்சம் ஏலக்காயை பவுடராக்கி, நீரில் கொதிக்க வைத்து, ஆறிய பின்னர் அந்த நீரைக் குடித்தால், உடனடி நிவாரணம் கிடைக்கும்.
புதினா இலைகள் வாய் நறுமணத்திற்கும் மற்றும் பல்வேறு உணவுகளை நறுமண சுவைïட்டுவதற்கும் பாரம்பரியமாக பயன்படுத்தப்படுகிறது. இந்த இலை அசிடிட்டிக்கு நிவாரணம் தரும் ஒரு சிறந்த மருந்தாகவும் பயன்படுகிறது.

இது வயிற்றில் அமிலத் தைக்குறைத்து, செரி மானத்திற்கு உதவுகிறது. அதுமட்டுமின்றி, இதன் குளிர்விக்கும் தன்மை அசிடிட்டியால் ஏற்படும் எரிச்சலுக்கும் நிவாரணம் தருகிறது

அசிடிட்டி பிரச்சினை ஏற்பட்டால், சில புதினா இலைகளைக் கசக்கி, நீரில் கொதிக்க வைத்து, ஆறிய பின்னர், இந்த நீரை பருகினால் நிவாரணம் கிடைக்கும்.

கருத்துகள்