மூட்டு வலி ஏற்பட காரணங்கள் :

மூட்டு வலி ஏற்பட காரணங்கள் :

♡ மூட்டு என்பது நமது முழங்கால்களில் இருப்பது மட்டும் இல்லை. தோள்பட்டைஇ முழங்கைஇ கழுத்துஇ இடுப்பு போன்ற அனைத்துமே மூட்டு வகைகள் தான். மூட்டு வலிக்கு முக்கியமான காரணம் நரம்பு அழுத்தம் அல்லது நரம்பு தூண்டல் தான் காரணமாக உள்ளது.

♡ வயிறு நிறைய உண்பது.

♡ தவறான உணவுப்பழக்க வழக்கம்.

♡ அதிக அளவு எண்ணெய் உணவுப் பொருட்களைச் சாப்பிடுதல்.

♡ அதிகளவு உப்பு சேர்த்துக் கொள்ளுதல்.

♡ தொடர்சியான தூக்கமில்லாதிருத்தல்.

♡ அதிக மனஅழுத்தம்.

♡ அளவுக்கு அதிகமான கோபம்.

♡ அதிக உடல் எடை.

♡ மதுஇ புகைஇ போதைப் பொருட்கள் உட்கொள்ளுதல்.

♡ வாயுத் தொல்லை உணடாக்கும் உணவுகளை அதிகமாக சாப்பிடுதல்.

♡ அதிக சக்கரை சேர்த்த இனிப்புகள்இ பானங்கள் குடித்தல்.

♡ கால்சியம் சத்து குறைவாக இருத்தல்.

♡ உடல் உழைப்பு இல்லாமை.

♡ மூட்டு தேய்மானம்.

♡ இள வயதில் உடற்பயிற்சி செய்யாமை.

♡ மூட்டுவலி வராமல் தடுக்கும் முறைகள்.

♡ அதிக பழுதூக்குதலைத் தவிர்க்க வேண்டும்.

♡ கால் முட்டியினை முடிந்தவரை உயரமாக தூக்குவதனால் வீக்கங்களை குறைக்கலாம்.


♡ ஏஸ் பாண்டேஜ் அல்லது எலாஸ்டிக் பாண்டேஜ் அணிந்து முட்டியின் மீது மிதமான அழுத்தத்தைக் கொடுக்கலாம். இப்படி செய்வது வீக்கத்தை குறைக்கும் வழிகளில் ஒன்று. மூட்டிகளின் கீழ் அல்லது இடையில் தலையணைகளை வைத்து உறங்கலாம்.
மூட்டுவலி வராமல் காக்கும் முறைகள்


மூட்டுவலி வராமல் காக்கும் முறைகள் :

♡ உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

♡ எண்ணை அதிகம் உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும்.

♡ கால்சியம் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

♡ மதுஇ புகை பழக்கங்களை விட வேண்டும்.

♡ நன்கு நேராக நிமிர்ந்து உட்காரஇ நிற்கப் பழக வேண்டும்.

♡ நிற்கும் பொழுது பாதங்ளை சற்று அகற்றி வைத்து நிற்பதால் உடல் எடை சமமாகப் பரவும்.
மூட்டுவலி வந்தபின் காக்கும் முறைகள்


மூட்டுவலி வந்தபின் காக்கும் முறைகள் :

♡ தோள்களை சரியான நிலையில் வைப்பதாலும் முதுகுத் தண்டை நிமிர்த்தியபடி உட்காருவதிலும் நல்ல பலன் கிடைக்கும்.

♡ ஹைஹீல்ஸ் காலணிகளைத் தவிர்க்க வேண்டும். இது இடுப்பு மற்றும் கால் மூட்டுகளில் அழுத்தத்தை ஏற்படுத்தும்.

♡ பகல் உணவுக்குப் பின் 10இ20 நிமி டங்கள் ஓய்வெடுப்பது மூட்டுவலியை நன்கு குறைக்கும்.

♡ உப்பு கரைத்த நீரில் குளித்தால் பக்க விளைவுகள் ஏதுமின்றி மூட்டு வலி பறந்து போகும்.

♡ சிறிது கறுப்பு எள்ளை தண்ணீரில் இரவு முழுதும் ஊறவைத்து பிறகு காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.

♡ எலுமிச்சை சாறு மற்றும் தேன் தினம் இருமுறை வெறும் வயிற்றில் குடித்தால் வலி குறையும்.

♡ மூட்டுவலிக்கு உடனடி தீர்வு வேண்டுமெனில் வெதுவெதுப்பான தேங்காய் அல்லது கடுகு எண்ணெயை நன்கு மூட்டில் தேய்த்தால் வலி குறையும்.

♡ ஐஸ் கட்டிகளால் வலி ஏற்படும் இடத்தில் ஒத்தடம் வைக்கலாம். முதல் நாளில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 15 நிமிடங்கள் வரை ஐஸ் கட்டிகளை வைக்கலாம். முதல் நாளுக்குப்பின் குறைந்தது ஒரு நாளில் நான்கு முறை இதே போன்று செய்ய வேண்டும்.
உணவு முறைகள்


உணவு முறைகள் :

♡ வாழைப்பழம் அதிகமாக உண்ண வேண்டும்.

♡ காய்கறி சூப் அதிகமாக சாப்பிட வேண்டும்.

♡ கேரட்இ பீட்ரூட் போன்றவற்றை பச்சையாக சாப்பிட வேண்டும்.

♡ கால்சியம் அதிகம் உள்ள பால்இ பால் சார்ந்த பொருட்கள்இ முள் நிறைந்த மீன் போன்றவற்றை சாப்பிட வேண்டும்.

♡ புளிப்பான உணவு வகைகளை தவிர்க்க வேண்டும்.

♡ பாசிப்பருப்பை சூப்பை நாளொன்றுக்கு இருமுறை சாப்பிட மூட்டு வலி குறையும்.

- இருப்பினும் மருத்துவரை உடனடியாக அணுகவும். அவரின் பரிந்துரைப்படி மருத்துவ முறையை பின்பற்றுதல் நலம்.

கருத்துகள்

கருத்துரையிடுக