இயற்கையான மருந்து...

இயற்கையான மருந்து...
சின்ன வெங்காயம்

முதல்ல... சின்ன வெங்காயத்தை அதிகமா... சாப்பிடணும். இது இதயநோய், ஆஸ்துமா இவற்றையெல்லாம் கட்டுப்படுத்தும். பனிக்காலத்துல வர்ற சுவாசத்தடையை சீராக்கும். ஆண்மை விருத்திக்கும் நல்லது!

தேன்

இது மாதிரி ஒரு இயற்கையான மருந்து உலகத்திலே வேறு எதுவும் இல்லை! நாம தேனை சாப்பிடும்போதே ரத்தத்தில் கலந்துவிடும் அரிய மருந்து இது, அதனால்தான் மாத்திரைகளை தேனில் கலந்து சாப்பிடச் சொல்றாங்க டாக்டருங்க..! இதை தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வந்தா...நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாவது மட்டுமல்ல... நினைவாற்றலும் அதிகமாகும். மேலும் உற்சாகம் அதிகரிக்கும். ராத்திரி தூங்குறதுக்கு முன்பு, ஒரு ஸ்பூன் தேனை, மிதமான சூட்டில் உள்ள பாலில் கலந்து சாப்பிட்டால் நல்லா தூக்கம் வரும்.

தக்காளி

பழங்களில் நாம தினமும் சாப்பாட்டில் சேர்க்கிற தக்காளியைத் தான் முதல்ல சொல்லணும். தக்காளியை, லண்டனில் உள்ள பார்வேர்டு மெடிக்கல் ஆய்வுக்கூடத்தில் ஆராய்ச்சி பண்ணினாங்க. அதுல விரைப்பை பகுதியில் வரும் புற்றுநோயை 20 சதவீதம் குறைப்பதாக, ஆராய்ச்சியாளர்கள் சொல்லியிருக்காங்க.

தக்காளியில் சிவப்பு நிறம்தான் நல்லது. அதுல "லைஸோபீன்" என்ற மூலப்பொருள் இருக்கு. இது உடலுக்கு ரொம்ப... ரொம்ப நல்லது. அதோடு, போலிக் ஆசிட், இரும்பு சத்து, வைட்டமின் சி ஆகிய சத்துக்களும் இருப்பதால் தக்காளியை தினமும் சேர்ப்பது நல்லது.

முட்டைகோஸ்

காய்கறியில முட்டைக்கோஸில் நிறைய சத்துக்கள் இருக்கு. கண்ணுக்கு மிகவும் நல்லது, நினைவாற்றலையும் அதிகரிக்குது. பழங்களில் வாழைப்பழமும், மாம்பழமும் அதிகமாக சாப்பிடலாம். திராட்சைப் பழம் ஜீரணத்தை அதிகரிக்கும். உடம்பில் இருக்கும் விஷத்தன்மையை வெளியேற்றும். உடம்பை புஷ்டியாக்கும்.

பழங்கள்

பப்பாளி, அன்னாசி போன்ற பழங்களையும் அடிக்கடி சாப்பிடலாம். பப்பாளி, ஜீரணத்தை வேகப்படுத்தும்... அதில் என்சைம் அதிகமாக இருக்கு... மேலும் வாயு தொந்தரவை குறைக்கும். இதுபோக, மீன், தயிர், முட்டை ஆகியவற்றையும் அடிக்கடி சாப்பிடலாம்.

மஞ்சள்

மஞ்சளை அடிக்கடி சேர்த்துக்கிட்டா... மறதியை கட்டுப்படுத்தும், நினைவாற்றலை வளர்க்கும். தோலுக்கும், குடலுக்கும் ரொம்ப நல்லது. அடிக்கடி மீன் சாப்பிடுவதும் நல்லது. இதயநோய் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் ரத்தம் கெட்டியாவதை தடுக்கும். குறிப்பா... கடலில் கிடைக்கும் ஒமேகா 3 என்ற வகை மீனில் அதிக சத்துக்கள் இருக்குது. நான் சொன்னதை எல்லாம் அடிக்கடி சாப்பிட்டாலே போதும்... நோய் எதிர்ப்பு சக்தியும் கூடிடும்... ஆரோக்கியமும் கூடும். எந்த நோயும் நம்மை அண்டாது!

பூண்டு

அடிக்கடி நம்ம சாப்பாட்டுல பூண்டு சேர்த்துக்கிட்டா...வாயு தொந்தரவு இருக்காது. உடம்பில இருக்குற கொழுப்பை தடுக்கும். இடிச்சு சாறும் குடிக்கலாம், உப்போடு சேர்த்து கடிச்சு தின்னலாம். தீயில் சுட்டும் சாப்பிடலாம்... வேக வைத்து சாப்பிடுவதும் நல்லதுதான். ஆனா ஒண்ணே ஒண்ணு... ராத்திரியில் பூண்டு சாப்பிட்டுட்டு கணவன் மனைவி தாம்பத்தியத்தில் ஈடுபடக்கூடாது.

கருத்துகள்