இருதய நோய் குணமாக...

இருதய நோய் குணமாக...
செம்பருத்திப்பூவில் தங்கச்சத்து உள்ளது. பூவின் மொத்த எடையில் 4ல் ஒரு பாகம் தங்கச்சத்து உள்ளது. செம்பருத்திப்பூக்களைப் பக்குவப்படுத்தி சாப்பிட்டால், தங்கச்சத்தின் பலனைப் பெறமுடியும்.

செம்பருத்திப்பூ உஷ்ண நிவாரணி. கல்லீரல், இருதயம், மூத்திரப்பை வியாதிக்கும் கணைச்சூடு, எலும்புருக்கி, மேகக்காரிகை, வெள்ளை, வெட்டை, ரத்தப் பிரமியம், நீர்க்கடுப்பு, எரிச்சல், கல்லீரல் வீக்கம் முதலியவற்றிற்குச் சிறப்பான நிவாரணியாகும்.


ஐந்து செம்பருத்திப் பூக்களை அரை லிட்டர் தண்ணீரில் போட்டு கால் லிட்டராகச் சுண்டக் காய்ச்சி மூன்று வேளை சாப்பிட்டால், காய்ச்சல், நீர்க்கடுப்பு, நீர் எரிச்சல் குணமாகும்.

செம்பருத்திப்பூக்களை நூறு எண்ணிக்கையில் சேகரித்து 1,250 மில்லி நீரில் போட்டுக் காய்ச்சி 500 மில்லியாக வந்ததும் வடிகட்டி இதில் ஒரு கிலோ சீனி சேர்த்து சர்பத் பதமாகக் காய்ச்சி வைத்துக்கொண்டு, குழந்தைகளுக்கு ஒரு தேக்கரண்டி பால் அல்லது வெந்நீரில் கலந்து 4-50 தினங்கள் கொடுத்தால், குழந்தைகளின் கணைச்சூடு நிரந்தரமாகக் குணமாகும். நவீன மருத்துவத்தில் கணைச்சூட்டை நிரந்தரமாகக் குணமாக்க முடியாது. சயரோகத்தால் பாதிக்கப்பட்டவர்கள், இந்த சர்பத்தைத் தொடர்ந்து மூன்று மாதங்கள் சாப்பிட்டால் சயரோகம் முழுமையாக நிவர்த்தியாகும்.  கல்லீரல், இருதய நோய்கள் குணமாகும்.

ஒரு கைப்பிடியளவு பூக்களை ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொதிக்கும் வெந்நீர் இரண்டு டம்ளர் விட்டு, மூடிவைக்க வேண்டும். பத்து நிமிடங்கள் சென்றபின் எடுத்து வடிகட்டி பால், சர்க்கரை தேவைக்குச் சேர்த்துச் சாப்பிட வேண்டும். தொடர்ந்து மூன்று மாதங்கள் உபயோகித்து வந்தால், கணைச்சூடு நீங்கும். கண் எரிச்சல் நீங்கி குளிர்ச்சியாகும். ரத்தசோகை நீங்கும். இதய பலவீனம் நீங்கும். மூளையின் செயல்பாடுகள் பலம் பெறும். இரத்தவிருத்தி உண்டாகும். வெள்ளை, வெட்டை நோய்கள் நீங்க பூக்களைச் சேகரித்து அரைத்து ஒரு எலுமிச்சங்காய் அளவில் எடுத்து பசும் பாலில் கலக்கி காலை, மாலை ஆகாரத்துக்கு முன், மூன்று தினங்கள் சாப்பிட்டால் குணமாகும்.

செம்பருத்திப்பூக்களின் மத்தியில் உள்ள மகரந்தக் காம்புகளைச் சேகரித்து, இதில் உள்ள மகரந்தப் பொடியை நன்றாகக் காயவைத்துப் பொடி செய்து வைத்துக்கொண்டு, ஒரு தேக்கரண்டி பொடியைப் பாலில் கலந்து காலை, மாலை சாப்பிட்டு வந்தால், உடல் பலம் பெறும். ஆண் தன்மை அதிக வலிமை பெறும்.

செம்பருத்திப்பூவை ஒரு கைப்பிடியளவு எடுத்து, 250 மில்லி தண்ணீரில் போட்டு நன்றாக ஊறும்படி வைத்திருக்கவேண்டும். நன்றாக ஊறியபின் இந்த நீரைக் குடித்து வந்தால் சிறுநீர் தொடர்பான நோய்கள் நீங்கும். நீரடைப்பு, நீர் எரிச்சல் உடனே நிவர்த்தியாகும்.

செம்பருத்திப்பூ இதழ்களைச் சேகரித்து நிழலில் நன்றாக உலர்த்தி எடுத்து, ஒரு கிலோ அளவிற்கு ஒரு ஜாடியில் போட்டு, இதில் கால் கிலோ தேன் சேர்த்து 5 கிராம் ஏலப்பொடியையும் இதில் சேர்த்து ஒன்றாகக் கலந்து மூடி வைக்கவேண்டும். பத்து தினங்கள் ஊறியபின் ஒருநாள் சூரிய வெப்பத்தில் வைத்து எடுத்துப் பயன்படுத்தவேண்டும். காலை, மாலை ஒரு தேக்கரண்டியளவு எடுத்துச் சாப்பிட்டு வந்தால் கணைச்சூடு, எலும்புருக்கி, கல்லீரல் வீக்கம், மேகக் காங்கை, இருதய பலவீனம் நீங்கும்.

கருத்துகள்