இரும்புச்சத்துள்ள நெல்லிக்காய்...

இரும்புச்சத்துள்ள நெல்லிக்காய்...
உடல் இளமையைத் தக்கவெச்சு, முதுமையைத் தள்ளிப் போடுற அபூர்வக் கனி.. அவ்வைக்கு அதியமான் கொடுத்த இந்த நெல்லிக்கனி! அபரிமிதமான இரும்புச் சத்தைத் தனக்குள்ள வெச்சிருக்கற இந்த நெல்லிக்காய், பெண்களோட கருப்பை கோளாறுகள் பலவற்றையும் நீக்கக்கூடியது.

நெல்லிப் பொடியை கஸ்தூரி மஞ்சளோட சேர்த்து, உடம்புல பூசிக் குளிச்சா, சரும வியாதிகள் ஓடியே போய்விடும். பெரிய நெல்லிக்காயோட சதைப் பகுதியோட தேன், ரோஜா இதழ்கள், கல்கண்டு சேர்த்து குல்கந்து பண்ணிச் சாப்பிட்டா, கர்ப்பிணிப் பெண்களுக்குத் தேவையான கூடுதல் இரும்புச்சத்து தடையில்லாம கிடைக்கும்.

நெல்லிக்காய்ல மட்டும் இல்ல.... அருநெல்லிக்காய்லயும் இதே மருத்துவ குணங்கள் உண்டு.

அருநெல்லிக்காய் ரசம்:

வாணலியில ஒரு கைப்பிடியளவு அருநெல்லிக்காய் போட்டு, ரெண்டு டம்ளர் தண்ணியை ஊத்தி வேகவையுங்க. பிறகு அதை நல்லா மசிச்சு, கொட்டையை நீக்கிட்டு, அதோட ஆறு பச்சை மிளகாய், சிட்டிகை மஞ்சள்தூள், பெருங்காயம், உப்பு, ஒரு டம்ளர் தண்ணி சேர்த்து கொதிக்க விடுங்க. கால் கப் துவரம்பருப்பை வேக வெச்சு, நீர்க்கக் கரைச்சு, நெல்லிக்காய் ரசத்துல கொட்டி, நுரைச்சு வந்ததும் இறக்கிடுங்க. ஒரு டீஸ்பூன் நெய்யில கொஞ்சம் கடுகு, ரெண்டு மிளகாய்ப் பழம் தாளிச்சுக் கொட்டி, கைப்பிடி கொத்துமல்லித் தழையை பொடியா நறுக்கி, ரசத்துல தூவுங்க. டேஸ்ட் அப்பிடியே எலுமிச்சை ரசம் மாதிரியே இருக்கும்.

இதுல நெல்லிக்காய்க்குப் பதிலா, மாதுளை முத்துக்களைப் போட்டு மாதுளை ரசமும் வைக்கலாம். வாசனையும் ருசியுமா ஜமாய்க்கற இந்த ரசம், வயித்துக் கோளாறுகளுக்கு அருமருந்து!

குழந்தை தூக்கத்துல பல்லை நறநறனு கடிக்கறதா? வயித்துல பூச்சி இருக்கறதுதான் பிரச்னை! அதுக்குத்தான் அந்தக் காலத்துலயெல்லாம் மாசம் ஒருவாட்டி காலையில வெறும் வயித்துல குழந்தைகளுக்கு வேப்பங்கொழுந்து தின்னக் கொடுப்பார்கள். துளிர் வேப்பிலையை மையா அரைச்சு உருட்டி, உள்நாக்குல போட்டு, கூடவே அரை கரண்டி தயிரை குடிக்க வச்சா கசப்பு ருசி தெரியாது! பூச்சி அவ்வளவும் மலத்துல வெளியேறிடும்.

ஒரு வயசுக்குட்பட்ட குழந்தையா இருந்தா, வேப்பெண்ணெயை இங்க் ஃபில்லர்ல எடுத்து, குழந்தையோட ஆசன வாய்க்குள்ள சில சொட்டு விடலாம். மறுநாளே எல்லாப் பூச்சியும் வெளியேறிடும்.

கருத்துகள்