தேமல் குணமாக....

தேமல் குணமாக....
உடலில் ஏற்படும் சின்னச் சின்ன பிரச்சனைகளையும் உபாதைகளையும் பெரிதாக எடுத்துக்கொள்ளமல், அஜாக்கிரதையாக இருந்து விட்டால், மோசமான பின் விளைவுகளை சந்திக்க நேரிடும். ஆகவே, சரியான முறையில் உடலை பேணி வந்தாலே பல பிரச்சனைகள் தீர்ந்து விடும். குணப்படுத்தக் கூடிய எளிய வழிமுறைகளை சில.....

தலைமுடி கருமையாக வளர:

சிலருக்கு இளவயது நரை, முடி செம்பட்டை, முடி உதிர்தல் போன்றவை உண்டாகும்.

எள்ளுச் செடியின் இலைகள், வேர் ஆகியவற்றை எடுத்து நிழலில் உலர்த்தி பொடியாக்கி கஷாயம் செய்து அதனை தலையில் தேய்த்து சிறிது நேரம் வைத்திருந்து பின் அலசி வந்தால் மேற்கண்ட பிரச்சினைகள் நீங்கும். தலைமுடியும் கருமையாக நீண்டு வளரும்.

கண் சிவப்பு மாற:

சிலருக்கு உஷ்ணம் அதிகமாவதால் கண்களில் மேல் கட்டி மற்றும் கண்விழிகள் சிவந்துபோதல் போன்றவை உண்டாகும். இவர்கள் நாமக்கட்டியை தண்­ணீரில் குழைத்து கண் இமைகளின் மீது பற்று போட்டால் கண் கட்டி மற்றும் கண் சிவப்பு மாறும்.

தேமல் வந்து தடிச்சிப் போச்சா....

பழுத்த பூவரசு இலை, வேப்பங் கொழுந்து, பொன்னாவரைப் பூ, குப்பைமேனி இலை, இலவம் இலை (இலவம் பஞ்சு மர இலை) கார்போக அரிசி, கருஞ்சீரகம் இதையெல்லாம் சம அளவு எடுத்து ஒண்ணாச் சேர்த்து அரைத்து தேமல் இருக்குற இடத்துல தடவி ஒரு மணி நேரம் ஊறவைத்து பிறகு குளிக்கணும்.

இன்னொரு வைத்தியம்:

முட்டையோட வெள்ளைக்கரு, வெந்தயம், வெள்ளரிப் பிஞ்சு இந்த மூன்றையும் சேர்த்து அரைத்தும் தடவலாம்.

கபம் அதிகமா இருக்குற உடம்புக்குத்தான் தேமல் வரும். கபம் அதிகமாக இருந்தாலே தோல் தடிச்சுப் போகும். மலச்சிக்கல், தூக்கமில்லாம இருக்கிறது இப்படி பல காரணத்துனால இந்த தேமல் வரும்.

கருத்துகள்