காய்கறியின் பயன்கள்

காய்கறியின் பயன்கள்
கத்தரிக்காய்:- நினைவாற்றலை பெருக்கும். உடலுக்கு குளிர்ச்சி தரும்.
காலிபிளவர்:- நரம்பை பலமாக்கும். உடலுக்கு புத்துணர்வு தரும்.
பீன்ஸ்:- எலும்பு, பற்களின் பலத்தை கூட்டும். கல்லீரல் உஷ்ணத்தை நீக்கும்.
பீட்ரூட்:- ரத்தத்தை சுத்திகரிக்கும். நரம்பு தளர்ச்சியை போக்கும்.
உருளைக்கிழங்கு:- சரும நோயை விரட்டும். உடலுக்கு வலிமை தரும்.
பரங்கிக்காய்:- பித்தம், சூடு, மேகநோய், மூலநோயை விரட்டும். (வாத குணம் உடையது)
புடலங்காய்:- வயிற்று பூச்சிகளை கொல்லும். வாதபித்த கபத்தை போக்கும்.
சுரைக்காய்:- தாகம் தணிக்கும். உடலை உரமாக்கும்.
வாழைத்தண்டு:- உடல் நஞ்சை நீக்கும். பித்தம், உடல் உஷ்ணத்தை போக்கும். சிறுநீரக கற்களை நீக்கும் சக்தி உடையது.
பலாக்காய்:- மூளைக்கு வலிமை தரும். வீரிய புஷ்டி உண்டாக்கும்.
முட்டைக்கோஸ்:- குடல் புண்களை ஆற்றும். வாயுத்தொல்லை, நெஞ்சுவலியை போக்கும்.
முருங்கைக்காய்:- நரம்புகளை வலுவாக்கும். கருப்பை கோளாறுகளை விலக்கும்.
பாகற்காய்:- நீரிழிவை போக்கும். வயிற்று பூச்சிகளை கொல்லும்.

கருத்துகள்