நீரிழிவு நோயாளிகள் பயணம் செய்யும்போது...

நீரிழிவு நோயாளிகள் பயணம் செய்யும்போது...
நீரிழிவு நோயாளிகள் தனியாக பயணம் செய்வது நல்லதல்ல. தனியாக பயணம் செய்யும்போது தங்களைப் பற்றி குறிப்பு அடங்கிய கார்டு ஒன்றை பாக்கெட்டில் வைத்திருக்க வேண்டும். அதில் பெயர், விலாசம், டெலிபோன் எண், மருந்துகளின் பெயர், சிகிச்சை அளிக்கும் டாக்டரின் விலாசம் போன்றவை இடம் பெற்றிருக்க வேண்டும். உடலில் திடீரென்று சர்க்கரையின் அளவு குறைந்தால், தலைசுற்றல், நினைவாற்றல் இழப்பு போன்றவை ஏற்பட்டுவிடும். இந்த மாதிரியான சூழ்நிலைகளில் நோயாளியுடன் செல்பவர் உடனடியாக என்ன செய்யவேண்டும் என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும். நீரிழிவு நோயாளி இருக்கும் குடும்பத்தினரும் இதை தெரிந்து வைத்துக்கொள்ளவேண்டும்.
நீரிழிவு நோயாளிகள் செய்யக்கூடாத விஷயங்கள்
அதிகமான அளவு உடற்பயிற்சி செய்தல்
சரியான நேரத்துக்கு உணவு அருந்தாமை
ஊசியில் இன்சுலின் அளவை அதிகரித்தல்
மாத்திரையின் அளவில் ஏற்படும் தவறுதல்
வேறு நோய்களால், நீரிழிவு நோய்க்குரிய மாத்திரை சாப்பிட முடியாமை போன்றவைகளால் உடலில் சர்க்கரையின் அளவு குறைந்தால்...
அதிக சோர்வு
கண் இருண்டு போதல்
உதடு மரத்து போகும் உணர்வு
அதிகமாக வியர்த்தல்
இதய துடிப்பு
நினைவாற்றல் இழப்பு போன்றவை ஏற்படும்.
இவ்வாறு ஏற்பட்டால், குளுக்கோஸ் கலக்கி கொடுக்க வேண்டும் அல்லது இனிப்பு சாப்பிடவேண்டும். உடனே மருத்துவமனை கொண்டு செல்லவேண்டும்

கருத்துகள்