வீட்டு சூழலும் குழந்தை நோய்க்கு காரணம்

வீட்டு சூழலும் குழந்தை நோய்க்கு காரணம்
சென்னையின் இதயப் பகுதியிலிருக்கிறது ஒரு பெண்ணின் வீடு. விலையுயர்ந்த பூச்சாடிகள். அழகான சோஃபா செட்டுகள். கண்ணைக் கவரும் காஷ்மீர கார்ப்பெட் என்று அவளது வீடு ரொம்ப அழகாக இருக்கும். கணவன் குழந்தைகள் ஏன் வேலைக்காரி கூட எப்போதும் நீட்டாக இருக்க வேண்டும் என்பதில் அவள் ரொம்ப கரெக்டாக இருப்பாள். ஆனால், அவளின் வீட்டுக்கருகில் தெருவில் குப்பைத் தொட்டியில் குப்பைகள் நிறைந்து வழிந்து கீழே கொட்டிக் கொண்டிருக்கும். அங்கு நாலைந்து பன்றிகள் தங்கள் பெரிய குடும்பத்துடன் வசித்து வருகின்றன. இதையெல்லாம் குறிப்பிட்டு யாராவது கேட்டால். "என் மட்டிலும் என் வீட்டை நான் நூறு சதவிகிதம் சுத்தமாத்தான் வச்சிருக்கேன். தெரு சுத்தமா இல்லையின்னா. அது என் குடும்பத்தை எந்த விதத்தில் பாதிக்கப் போகுது?" என்பாள் அவள்.
இந்த கேள்வி அவளுக்கு மட்டுமே எழுவது அல்ல. நம்மில் பலருக்கும் எழுவதுதான். ஆனால் இதற்கான பதில்தான் சற்றே பயங்கரமானது. ஒரு சின்ன கொசுக்கடி கூட உங்கள் வீட்டுக் குழந்தைகளின் மூளையை பாதிக்கக் கூடும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

குழந்தைகளை அதிகமாகத் தாக்கும் மூளைக்காய்ச்சல் நம்மைத் தாக்கும் விதத்தை அறிந்தால் நீங்கள் அசந்து போய்விடுவீர்கள். வைரஸ் தாக்கிய பன்றி, பறவை அல்லது குதிரையை கொசு கடிக்கும் போது அவற்றின் ரத்தத்துடன் சேர்ந்து வைரஸ் கிருமியையும் கொசுக்கள் உறிஞ்சிக் கொள்கின்றன. அந்தக் கொசுக்கள் அதே வேகத்துடன் பக்கத்திலிருக்கும் நம் வீடுகளுக்குள் நுழைந்து ஜாலியாக விளையாடிக் கொண்டிருக்கும் நம் குழந்தைகளை கடித்தால் அவ்வளவுதான்... கொசுவுக்குள் இருக்கும் அந்தக் கிருமி குழந்தைகளின் உடலினுள் சென்றுவிடும்! குழந்தையின் உடலினுள் ஒரேயொரு கிருமி நுழைந்தாலே போதும். அது அப்படியே ஆயிரக்கணக்கில் பெருகிவிடும்.
திடீரென்று குழந்தைகளுக்கு மிக அதிகமான ஜூரம் கட்டுப்படுத்த முடியாத தலைவலி, வலிப்பு, நினைவு தப்புதல், தொடர்ந்த வாந்தி போன்றவை இருந்தால் கவனமாக இருங்கள். இவையெல்லாம் தான் மூளை காய்ச்சலின் அறிகுறிகள். மூளைக் காய்ச்சலில் நிறைய வகைகள் இருந்தாலும். "ஜாப்பனீஸ் - பி- என்செபாலிபிடிஸ்" என்ற வகைதான். அதிகம் பேரைத் தாக்குகிறது. ஆச்சர்யமான விஷயம் என்ன தெரியுமா? இந்த நோய்க்கிருமிகள் கொசு மற்றும் பன்றியின் உடலுக்குள்ளேயே இருந்தால். அந்த கொசுவோ, பன்றியோ அதனால் எந்த விதத்திலும் பாதிக்கப்படுவதில்லை. மனிதன் மட்டுமே இந்தக் கிருமியால் கொடூரமாகத் தாக்கப்படுகிறான்.
சரியான சமயத்தில் மருத்துவரிடம் குழந்தையைக் கூட்டிக்கொண்டு போனால் எந்தப்பிரச்சனையும் கிடையாது. இல்லையென்றால், நோய் குணமானாலும் அடிக்கடி வலிப்பு வருவது, கைகள் அல்லது கால்கள் விளங்காமல் போவது, மனநலம் குன்றுவது போன்ற பக்க விளைவுகள் நேரலாம். சில ஆபத்தான கேஸ்களில் மரணம் கூட சம்பவிக்கலாம்.
சரி, எப்படித்தான் இதைத் தடுப்பது?
உங்கள் சுற்றுப் புறத்தைத் தூய்மையாக வைத்துக் கொள்ளுங்கள். கொசுக்கள் ஒழித்தாலே. முக்கால்வாசி நோய் தீர்ந்த மாதிரிதான். குழந்தைக்கு ஆறு மாதத்திற்கு மேல் ஆனதும். ஒரு மாத இடைவெளியில் இரண்டு முறை தடுப்பூசிபோட வேண்டும். பன்றி போன்ற பிராணிகள் வீட்டருகில் நெருங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
மலேரியா ஜூரம் வந்தால் என்ன செய்வது?
கொசு கடிப்பதால்தான் மலேரியா வருகிறது என்பது தெரிந்த விஷயம்தான். மலேரியா ஜூரம் வந்தால், குளிர் அதிகமாகி, உடல் தூக்கி தூக்கிப் போடும். உடனே கவனிக்காவிட்டால் காய்ச்சல் தீவிரமாகி மூளையையே தாக்கிவிடும். ஓரளவுக்கு ஜூரம் சரியாகிவிட்டால் போதும், நம் மக்கள் மாத்திரை சாப்பிடுவதை நிறுத்தி விடுவார்கள். ஆனால் மலேரியா ஜூரம் குறைந்தாலும், நோய் உண்டாக்கும் கிருமிகள், இரத்தத்திலேயே சில நாட்களுக்கு பதுங்கிக் கொண்டிருக்கும். எனவே, அவை முழுவதும் அழியும் வரை, மருந்துகளை உட்கொள்ள வேண்டும். இதனால் இரண்டு நன்மைகள் உண்டு. ஒன்று உங்களுக்குப் பூரண குணமாவது. மற்றொன்று உங்களிடமிருந்து மற்றவர்களுக்கு நோய் பரவுவதும் தவிர்க்கப்படுகிறது.
சில சமயம் மாமிசத்தில் தட்டைப் புழுக்களின் முட்டைகள் இருக்கும் (அது மட்டுமல்ல, காய்கறிகளை அசுத்தமான தண்ணீரில் கழுவுவதாலும் அந்த முட்டைகள் அவற்றில் இருக்கலாம்) மாமிசத்தை சரியாகக் கழுவாமல் சமைத்தாலோ (அல்லது) சரியாக வேகாமல் உண்டாலோ, இந்த முட்டைகள் சாகாமல், இரத்தத்தில் கலந்து மூளைக்குச் சென்று அங்கேயே தங்கி விடுகிறது. இடத்தைக் கொடுத்தால் மடத்தைப் பிடிப்பது போல, தட்டைப் புழுக்கள் மூளையிலேயே வளர ஆரம்பிக்கிறது. இதனால் மூளையில் கட்டி உருவாகிறது. தலைவலி, வலிப்பு போன்ற பிரச்சனைகளும் வரும். ஆரம்பத்திலேயே கண்டுபிடித்தால், முழுமையாகக் குணப்படுத்தி விடலாம். புகழ்பெற்ற டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் அவதிப்பட்டது கூட, NEUROCYSTICERCOSIS என்ற நோயால்தான். அவரால் இப்போது வெற்றிகரமாக விளையாட முடிகிறது.
ரேபிஸ் பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்:
"டாமி" "பிளேக்கி" என்று கொஞ்சியபடி குழந்தைகள், வீட்டில் வளர்க்கப்படும் நாய்களுடன் விளையாடுவது ரொம்ப சகஜமாகிவிட்டது. நிறைய வீடுகளில் குடும்பத்தில் ஒரு மெம்பராகவே மாறிவிட்ட நாய்க்கு, முறையாகத் தடுப்பூசி போட வேண்டியது நம் கடமை. இல்லையென்றால், வைரஸ் கிருமிகள் நாயைத் தாக்கி "ரேபிஸ்" நோயை உண்டாக்கலாம். ரேபிஸ் நோயுள்ள நாய் நம்மைக் கடிக்க வேண்டியதில்லை. அதன் எச்சில் பட்டாலேகூட போதும். நோய் நமக்கும் தொற்றிக் கொள்ளும். ரேபிஸ் இல்லாத நாய் கடித்தாலும் சந்தேகம் இருந்தால் உடனே தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள்.
ரேபிஸ் கிருமிகள், தொண்டையிலுள்ள தசைகளைப் பாதிப்பதால் சாப்பாடு... ஏன், தண்ணீரைக் கூட விழுங்க முடியாது. பேசவும் முடியாது. வைரஸ் கிருமி அதிவேகமாகப் பரவி மூளையைத் தாக்கிவிடும். ரேபிஸ் நாய் கடித்த பிறகு தடுப்பூசி (ARV) போட்டுக் கொண்டால், உயிரைக் காப்பாற்றும் சாத்தியம் கொஞ்சம், (கவனியுங்கள்... கொஞ்சம்தான் உண்டு) எனவே, கண்டிப்பாக உங்கள் வீட்டு நாய்க்குத் தடுப்பூசி போடுங்கள். அபூர்வமாக வைரஸ் தாக்கிய வெளவால்கள் நாயைக் கடிப்பதாலும் நாய்க்கு ரேபிஸ் வரலாம். நிறைய வீடுகளில் பூனையும் செல்லப்பிராணியாக வளர்க்கிறார்கள். பொதுவாகவே, பூனை மனிதர்களைக் கடிக்காது. ஆனால் பூனையின் உடலுக்குள் பேக்டீரியா நுழைந்தால்.... தொலைந்தது. பூனை நம்மைக் கடிக்க ஆரம்பிக்கும். இதனால் நமக்கு வரும் காய்ச்சலுக்கு, "CAT BITE FEVER" என்று பெயர். நம்ம செல்லப் பூனைதானே கடித்தது என்று சும்மா விட்டீர்களானால் "புரோரோஸோவா" சத்தமே போடாம, மூளை வரை பரவி விடும். ஆகையால், பூனையிடம் ஏதாவது வித்தியாசங்கள் தெரிந்தால், உடனே கால்நடை மருத்துவரிடம் காட்டுங்கள்.
தட்டுமுட்டுச் சாமான்கள் நிறைய இருந்தால், அந்த வீட்டில் அழையா விருந்தாளியாக எலி கண்டிப்பாக இருக்கும். எலி பார்ப்பதற்குத்தான் ரொம்பச் சின்னதாக இருக்கிறதே தவிர அதனால் வரும் பிரச்சனைகள் நிறைய... நம் நாட்டையே ஒரு கலக்கு கலக்கிய பிளேக்கை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்திருக்க முடியாது. நெறிகட்டுவது ஜூரம் வருவது போன்ற அறிகுறிகளை முதலில் காட்டும் ப்ளேக் நோய், இறுதியில் உயிரையே வாங்கிவிடும். "எலி பிறாண்டினாலோ (அ) கடித்தாலே RAT BITE FEVER வரக்கூடும். இதனால், தலைவலி, குளிர்ஜூரம், வாந்தி போன்ற தொல்லைகள் ஏற்படும் வேண்டாத சாமான்களை வீட்டில் சேர்க்காதீர்கள்.
நாம் கால் பதித்து நடக்கும் மண், பிராணிகளின் சாணம், தூசி என்று எல்லாவற்றிலுமே, "டெடனஸ்" நோயை உருவாக்கும் பேக்டீரியா இருக்கிறது. நம் கையில் ஏதாவது காயம் பட்டவுடன் மண்ணில் கைவைத்தாலோ (அ) வேறு வழிகளிலோ பேக்டீரியா நைஸாக உள்ளே நுழைந்தாலோ, நமக்கு "டெடனஸ்" வந்துவிடும். ஜூரம், வலிப்பு போன்ற பல அறிகுறிகள் இருந்தாலும் நமது தசைகளை இறுக்கி, செயலிழக்க வைப்பதுதான் இந்தக் கிருமியின் முக்கிய வில்லத்தனம். வாயைக் கூடத் திறக்க முடியாத இந்த நிலைக்கு லிளிரிசி யிகிகீ எனப் பெயர். இந்த அபாயத்திலிருந்து தப்பித்துக் கொள்ளத்தான் எந்தச் சின்ன அடிபட்டாலும், ஒரு டி.டி. (டெட்டனஸ் டாக்ஸாய்டு) போட வேண்டும் என்கிறோம்.
வீடு சுத்தமும், கவனமாக நம்மை வைத்துக் கொள்வதும் தான் இந்த நோய்களிலிருந்து காப்பாற்றும்.

கருத்துகள்