குழந்தைகள் தொலைக்காட்சி பார்ப்பது நல்லதா?

குழந்தைகள் தொலைக்காட்சி பார்ப்பது நல்லதா?
உங்கள் குழந்தை தினமும் ஓய்வெடுத்துக் கொள்வது என்பது மிக அவசியம். எதையாவது படித்தல், ஓய்வு எடுத்தல் அல்லது தொலைக்காட்சியை ஒரு வரையரைக்குள் பார்க்கலாம். டெல்லியைச் சேர்ந்த முனைவர் மதுமிதா பூரி என்ற குழந்தை மனோதத்துவ நிபுணர் கூற்றுபடி பள்ளி நாட்களில், இரவில் குழந்தைகள் 1 1/2 மணி நேரம் தொலைக்காட்சி பார்க்கலாம். ஆனால் இன்று தொலைக்காட்சி குழந்தைகளின் நேரத்தையும் உலகையும் ஆக்ரமித்து விடுகிறது.

பல தொலைக்காட்சிகள் குழந்தைகளுக்கான நல்லனவற்றை கொடுப்பதில்லை. குழந்தைகள் ஒருநாளைக்கு நான்கு மணி நேரம் தொலைக்காட்சி பார்க்கின்றனர். குழந்தைகளின் மனவளர்ச்சி தொலைக்காட்சியை அதிக நேரம் பார்ப்பதால் குறையும். துணைக்கோள் தொலைக்காட்சி வழிகளும் குழந்தைகளை வீட்டில் சிறை வைத்து விடுகின்றன. அவர்கள் மாலையில் தொலைக்காட்சியைப் பார்க்கத் தொடங்கினால் இரவு வெகுநேரம் வரை கண்விழித்து தொடர்ந்து தொலைக்காட்சியைப் பார்த்து, பின்னர் தூங்கச் செல்கிறார்கள். அவர்கள் வெளியே சென்று விளையாடுவதுமில்லை. இதற்கு பதில் வீட்டில் உட்கார்ந்து வீடியோ விளையாட்டு விளையாடுகிறார்கள். இந்தியாவில் இளைஞர்கள் வாரத்திற்கு 25 மணி நேரம் தொலைக்காட்சியின் முன் செலவழிக்கின்றனர். தங்கள் கண்களையும் கண்பார்வையையும் பிற நல்லவற்றில் செலவழிப்பதில்லை. அவர்கள் தங்கள் புருவத்தை உயர்த்துகிறார்கள். கண் சிமிட்டுவதைக்கூட மறந்து விடுகிறார்கள். அதையே உற்றுப் பார்க்கிறார்கள். இறுதியாக அவர்கள் தங்கள் கண் பார்வையையே இழக்கிறார்கள். அதனால் கண்களுக்கு கண்ணாடி அணியும் நிலை ஏற்படும். மேலும் அவர்கள் தொடர்ந்து தொலைக்காட்சியைப் பார்க்கும் பழக்கம் தொடர்கிறது. அதில் மாறுதல் செய்ய முயற்சி எடுப்பதில்லை.
சில குழந்தைகள் தொலைக்காட்சி பார்ப்பதையே பைத்தியமாகச் செய்வார்கள். மேலும் குறைந்த நேரம் பார்க்கும் குழந்தைகளின் ஞாபக சக்தி நிறைவாகவும், முன்சொன்ன குழந்தைகளுக்கு குறைந்தும் போய்விடும். குழந்தைகள் நீண்ட நேரம் தொலைக்காட்சி பார்ப்பதால் தங்கள் பள்ளிப் படிப்பைப் படிக்க நேரமின்றி விட்டு விடுகின்றனர். அவர்கள் வெளியே சென்று விளையாடுவதிலும் கவனம் செலுத்துவதில்லை. குழந்தைகள் கற்பனை சக்தி ஏதுமின்றி, மந்தமான மூளையுடனே வளர்வார்கள். மேலும் தொலைக்காட்சி பார்ப்பது குழந்தைகளின் ஒருமுகப்படுத்தும் திறனை குறைக்கிறது. அவர்கள் சீக்கிரம் களைப்படைகிறார்கள். மற்றும் அவர்களின் மனங்கள் நல்ல பயன்படும் வழியில் பணி செய்வதில்லை.
பால் உணர்வு மற்றும் பயங்கரவாதக் காட்சிகள் நமது திரைப்படங்களில் அதிகமாக உள்ளன. இயற்கையிலேயே நம் குழந்தைகள் அதைப் பார்த்துவிட்டு குதிப்பதும் கீழே விழுவதையும் செய்ய ஆரம்பிக்கிறார்கள்.
தொலைக்காட்சிகள் யாவும் கேளிக்கைக்காகவே என்பதை மறந்துவிடக் கூடாது. தங்கள் குழந்தைகள் இக்காட்சிகளை உண்மையென நம்பிவிடக்கூடாது. தொலைக்காட்சியில் வரும் திரையுலக பிரபலங்களின் தனிப்பழக்கம் ஆகியவற்றை போலச் செய்து பழகுவார்கள். பாடப் புத்தக செய்யுளைப் பாடுவதற்கு பதில் சினிமா பாட்டை மட்டும் பாடுவார்கள். இவை யாவும் இவர்களின் உடல், மன, வளர்ச்சிக்கான செயல்களை மட்டந் தட்டிவிடும்.
எனவே பெற்றோர்கள் குழந்தைகளைக் கட்டுப்படுத்த வேண்டும். தொலைக்காட்சி பார்ப்பது பள்ளிப் படிப்பை எவ்வளவு பாதிக்கிறது என்றும் கண்களுக்கு எவ்வாறு கேடு விளைவிக்கிறது என்பதையும் அவர்கள் புரிந்துகொள்ளுமாறு விளக்க வேண்டும்.
குழந்தைகளின் ஆளுமை எல்லா துறைகளிலும் சிறப்பாக வளர்க்கப்பட வேண்டும். உங்கள் குழந்தைகள் புத்தகங்களைப் படிக்கட்டும். தொலைக்காட்சியை விட புத்தகங்களைப் படிப்பது என்பது மிகச் சிறப்பான செயலாகும். குறிப்பாக கற்பனையான கேலியான கதைகள் யாவும் குழந்தையின் மனதில் நீங்கா இடம்பெறும். தேவதைக் கதைகள் அவர்களின் கற்பனா சக்தியை மேம்படுத்தும். குழந்தைகள் தங்கள் மனங்கள் மற்றும் முறைகளுக்கு ஏற்ற பயிற்சிகளைப் பெறும். குழந்தைகள் பின்னர் செயலாக்க சிந்தனையுடையவர்களாக மாறுவார்கள்.
புத்தகம் படித்தல் மனமகிழ்ச்சியைத் தரும். விளையாட்டுகள் குழந்தைகளின் வளர்ச்சிக்கு மிக முக்கியமானதாகும்.
விளையாட்டு மைதானம் என்பது பரிசோதனைச்சாலை போன்றது. வெளியுலகத் தொடர்பினை இவை வளர்க்கும். விளையாடும்போது குழந்தைகள் அவ்வப்போது சண்டை போடும். ஆனால் சீக்கிரம் அதை மறந்து ஒன்றாகி விடுவார்கள். அங்கு ஒருவரையொருவர் நன்கு புரிந்துகொள்வார்கள்.
குழந்தைகளின் இலக்கியம்
கீழேயுள்ள அட்டவணை குழந்தைகள் படிக்க வேண்டிய நூல்களின் பட்டியல் ஒன்றைத் தருகிறது. குழந்தைகள் இவற்றைப் படிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். பெற்றோர்கள் குழந்தைகளுக்காக இத்தகைய நூல்களை வாங்க வேண்டும்.
பஞ்ச தந்திரக் கதைகள்
கதா சரிட் சாகரா கதைகள்
தெனாலிராமன் கதைகள்
அக்பர்-பீர்பால் கதைகள்


முல்லா நசுருதீன் கதைகள்
இந்தியாவின் கிராமியக் கதைகள்
ஆயிரத்தோர் இரவுகள்


பாட்டி சொன்ன கதைகள்
தாத்தா சொன்ன கதைகள்
படுக்கை நேரக் கதைகள்

பெற்றோர்களுக்குச் சில குறிப்புகள்:
1. குழந்தைகள் தொலைக்காட்சி பார்க்கும் நேரத்தைக் குறைக்கவும்.
2. குழந்தைகள் பள்ளிப் பாடத்தை படிக்கும்போது தொலைக்காட்சியை நிறுத்தி விடவும்.
குழந்தைகளின் வாழ்க்கையில் தொலைக்காட்சி பெரும் பங்கெடுக்கிறது என்பதை பெற்றோர்கள் மறந்து விடுகின்றனர். தொலைக்காட்சியில் எதிர்மறையான பயங்கரவாத எண்ணம் ஏற்படுகின்றது. இது அவர்களை பயமுறுத்துகிறது. இதனால் அவர்களுக்காக விளையாட்டுப் பொம்மைகள் வாங்கவும், புதிய துணிமணிகள் எடுக்கவும் இயலாமல் போய் விடுகின்றன. தொலைக்காட்சியில் காட்டப்படும் விளம்பரங்கள் இவர்களை அதில் மூழ்கச் செய்து அதை வாங்க தூண்டப்படுவர். குழந்தைகள் பற்றிய ஆராய்ச்சியில் பயங்கரவாதக் காட்சிகளை தொலைக்காட்சியில் பார்க்கும் சிறார்கள் தாங்களும் அவ்வாரே நடக்கும் முயற்சியை செய்கின்றனர் எனத் தெரிய வருகிறது.
புதியனவற்றை குழந்தைகள் தெரிந்துகொள்ள தொலைக்காட்சி பெரிதும் உதவுகிறது. இது ஒரு குறிப்பிட்ட எல்லை வரைதான் உண்மையாகும். பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் தொலைக்காட்சியைப் பார்ப்பதில் மிகுந்த நேரத்தைச் செலவழிப்பது மிக துரதிருஷ்டமான செயலாகும்.

கருத்துகள்