முழு நட்ஸ் இவைகளில் புரதம், ஆரோக்கியமான இதயத்திற்கான கொழுப்புகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் வளமையாக உள்ளது. இவைகளில் சர்க்கரை குறைவாக இருப்பதால், சர்க்கரை நோய்க்கு இது மிகவும் நல்லதாகும்.
பிஸ்தா பருப்புகளில் ஊட்டச்சத்துக்கள் வளமையாக உள்ளது. அது உங்களை ஆற்ற திறனுடனும் நிறைவுடனும் வைத்திருக்கும். இதிலும் சர்க்கரை அளவு குறைவாக இருப்பதால், சர்க்கரை நோய்க்கு இது மிகவும் நல்லதாகும்.
ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி வளமையாக உள்ளது. சர்க்கரை நோய்க்கு இது மிகவும் முக்கியமான வைட்டமின்களாகும். இதில் சர்க்கரை அளவு குறைவாக இருப்பதால், சாப்பிடுவதற்கும் இது பாதுகாப்பானது.
பாதாம் சர்க்கரை நோய்க்கான மற்றொரு சிகிச்சை பாதாம். இயற்கையாகவே அதிக ஊட்டச்சத்து நிறைந்த உணவாகும் இது. ஊற வைத்த பாதாம்களும் உடல் ஆரோக்கியத்திற்கு நல்ல பயனை அளிக்கும்.
கிவிப்பழம் உட்கொள்வதற்கும், இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு குறைவதற்கும் இடையே நேர்மறையான தொடர்பு உள்ளது என பல ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்துள்ளனர். அதனால் தான் உங்கள் உணவுடன் இந்த பழத்தை சேர்ப்பது அவசியமாகும்.
லவங்கப்பட்டை டோனட்ஸ் தினமும் ஒரு டீஸ்பூன் லவங்கப்பட்டை எடுத்துக் கொண்டால் போதும், உடலில் உள்ள சர்க்கரை அளவுகள் பெகுவாக குறையும் என ஆய்வுகள் கூறுகிறது. அதனால் லவங்கப்பட்டை டோனட்ஸ் உண்ண தயங்காதீர்கள்.
தர்பூசணி தர்பூசணி பழத்தில் GI அளவு அதிகமாக இருந்தாலும் கூட, அதிலுள்ள க்ளைசீமிக் பாரம் குறைவாகவே இருக்கிறது. இதனால் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இந்த பழம் நல்லதே.
உலர் திராட்சை கைநிறைய உண்ணும் உலர் திராட்சை பழம் உங்கள் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்கும். சர்க்கரை நோயாளிகள் உண்ணுவதற்கான குறைந்த அளவிலான சர்க்கரை கொண்ட உணவுகளில் இதுவும் ஒன்று.
அன்னாசிப்பழம் சர்க்கரை நோயாளிகள் உண்ணுவதற்கான குறைந்த அளவிலான சர்க்கரை கொண்ட உணவுகள் பட்டியலில் அன்னாசிப்பழமும் இடத்தை பிடித்துள்ளது. நுண்ணுயிர் எதிர்ப்பி, அழற்சி எதிர்ப்பி மற்றும் பாக்டீரியா எதிர்ப்பி குணங்களை இது கொண்டுள்ளது.
தேன் நம் வீட்டில் பயன்படுத்தும் சர்க்கரையை விட தேன் சிறந்ததாகும். உங்கள் டீ அல்லது காபியை சுவைமிக்கதாக மாற்ற ஒரு டீஸ்பூன் தேன் போதும்.
மாதுளைப்பழம் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை மேம்படுத்தவும், அதனை கட்டுப்பாட்டில் வைக்கவும், இந்த சிறிய முத்துக்களை உண்ணுங்கள். இதில் சர்க்கரை குறைவாக உள்ளது.
சர்க்கரை நோய் உள்ளவர்கள் சர்க்கரையை முற்றிலும் தவிர்க்க வேண்டுமா?
கருத்துகள்
கருத்துரையிடுக