உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வச்சுக்க இப்படிப் பண்ணிப் பாருங்களேன்

ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ளவும் ஆரோக்கியமான உணவை உட்கொள்ளுதலே முதன்மையான வழியாகும். சரிவிகித ஊட்டச்சத்து தரும் உணவு முறையே ஆரோக்கியமான உடலையும் இதயத்தில் அழுத்தத்தையும் குறைத்து அதன் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. அதிக அளவு டிரான்ஸ்-கொழுப்பு உள்ள உணவுகளை தவிர்ப்பது நல்லது.

உடல் எடையை கட்டுப்பாட்டுடன் வைக்கவும் உடலின் எடையை எப்போதும் கண்காணித்து அதை கட்டுக்கோப்பாக வைப்பது அவசியம். உடல் பருமன் இதய சார்ந்த நோய்களுக்கு மிக முக்கிய காரணமாக விளங்குகிறது. உங்களது உயரத்திற்கேற்ப எவ்வளவு எடை இருக்கவேண்டும் என்பதை கண்டறிந்து அதை கண்டிப்பாக அதனை கட்டுக்குள் வைப்பது மிக அவசியமாகும்.

உடற்பயிற்சி செய்யவும் தினமும் உடற்பயிற்சி அல்லது யோகாசனம் செய்து வருவது, உடலையும், இதயத்தையும் ஆரோக்கியமாக பாதுகாக்கிறது. அனுதினமும் பயில்வதற்கு ஏதேனும் ஒரு வகையான உடற்பயிற்சியை தேர்ந்தெடுத்து தொடர்ந்து செய்து வாருங்கள். விளையாட்டு, ஏரோபிக்ஸ் அல்லது நடனம் ஆகியவை உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றன.

சுறுசுறுப்பாக இருக்கவும் உடலை சுறுசுறுப்பாக எப்போதும் வைத்திருக்க வேண்டும். நீங்கள் பொதுவாக அமர்ந்து வேலை செய்யும் தொழிலில் இருந்தால் தினமும் காலை அல்லது மாலையில் நடக்கவோ அல்லது மிதி வண்டியில் பயிற்சி மேற்கொள்வதோ உடலை சுறுசுறுப்பாக எப்போதும் வைத்திருக்க உதவும்.

கெட்ட பழக்கங்களை கைவிடவும் புகைப்பிடித்தல், மது அருந்துதல் மற்றும் இதர பழக்கங்களை தவிர்ப்பது நல்லது. இத்தகைய போதை பொருட்கள் உடலை ஊடுருவி மற்றும் உருக்குலைத்து உடலையும் இதயத்தையும் சேதப்படுத்துகின்றன. இத்தகைய போதைக்கு அடிமையாவதை மெதுவாக தவிர்க்க முயல வேண்டும் ஆனால் முழுமையாக விட்டு விட வேண்டும்.
மன அழுத்தத்தைக் குறைக்கவும் எவ்வளவு அதிகமாக சாதிக்க வேண்டும் என்ற எண்ணமிருந்தாலும் தனிப்பட்ட வாழ்கையிலும், வேலை அலுவல்களிலும் மன அழுத்தத்தின் அளவுகளை குறைத்துக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும். வாழ்க்கையையும் வேலையும் சரி சமமாக வைத்து வாழ்கையின் வழிப்படியே சென்று சந்தோஷத்தை அனுபவிக்க முயலவேண்டும் அதிக அளவு அழுத்தம் இதய நோய்களை உருவாக்கி விடும்.
பரம்பரை நோய் தானா என்று கண்டறியவும் பரம்பரை பரம்பரையாக பற்பல இதயம் சார்ந்த நோய்கள் தொடர்ந்து வருகின்றன. ஆதலால் மரபணு சார்ந்த குடும்ப விஷயங்களை கண்டறிந்து முன் யோசனையுடன் அத்தகைய நோய்களை தவிர்க்க முயற்சி மேற்கொள்ள வேண்டும். இது பின் நாட்களில் வரும் பல்வேறு சிக்கல்ளை தவிர்க்கும். அது மட்டுமல்லாமல் ஆரம்ப நிலையில் அறிந்து கொள்வதன் மூலம் இந்த நோய்களுக்கு சிகிச்சை செய்வதும் எளிதாக இருக்கிறது.

உணவில் மீன்களை சேர்த்துக் கொள்ளவும் எண்ணெய் நிறைந்த மீன்களையும் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு மிக்க உணவுகளையும் உண்டால் இதயத்திற்கு மிகவும் நல்லது. மத்தி, புதிய டூனா, மற்றும் சால்மன் போன்ற மீன்கள் ஒமேகா-3 கொழுப்பு சத்து மிக்கவையாகும். இவை இதய கோளாறுகளிருந்து நம்மை காக்கின்றன.

நல்ல தூக்கம் அவசியம் தினமும் போதுமான அளவிலும் மற்றும் நன்றாகவும் உறங்குவது மிகவும் அவசியமாகும். நீங்கள் தூங்கும் நேரத்தை குறைக்கும் போது பயம், மன அழுத்தம் மற்றும் உறக்கம் தொடர்பான கோளாறுகள் உடலில் ஏற்படும். இவை உங்கள் இதயத்தில் எண்ணற்ற கோளாறுகளை ஏற்படுத்தும்.

நன்கு சிரிக்கவும் இறுதியானதாகவும் மற்றும் முக்கியமாகவும் இருப்பது உங்கள் வாழ்க்கையை சந்தோஷமாக வாழ்வது - அது தான் இதயத்தை ஆரோக்கியமாக வைக்கும். வாய்விட்டு சிரிக்க வேண்டும். தினமும் 15 நிமிடங்கள் சிரித்தால் இரத்த ஓட்டத்தை 22% உயர்த்தும் என்று ஆராய்ச்சிகள் நிரூபித்துள்ளன.
இதயம் சமந்தமான தகவல்கள் 

கருத்துகள்