மெடிடேசன் செய்தால் இதயநோய் பக்கவாதம் வராது.. ஆய்வில் தகவல்

தினசரி இரண்டுமுறை [மந்திரம் ஜெபித்து]தியானம் செய்வது  மெடிடேசன் செய்தால் உயர் ரத்த அழுத்தம் கட்டுப்படும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நோய்கள் ஏற்படும் தடுக்கப்படுகிறது என்ற ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

மந்திரத்தை உச்சரித்தபடி தியானம், மெடிடேசன் செய்வது முனிவர்கள், சித்தர்களின் நடைமுறை. இந்தமுறைப்படி மெடிடேசன் செய்தால் இதயநோய், பக்கவாதம் ஏற்படாது என்கின்றனர் ஆய்வாளர்கள். தினசரி இருவேளை இருபது நிமிடங்கள் வரை மெடிடேசன் செய்பவர்களுக்கு 48 சதவிகிதம் வரை மாரடைப்பு, பக்கவாதம் மூலம் மரணம் சம்பவிக்கும் வாய்ப்பு குறைகறது என்கின்றனர் ஆய்வாளர்கள்.
மெடிடேசன் மூலம் அதிகம் கோபப்படுவது கட்டுப்படுத்தப்படுகிறது. இதனால் ரத்தக் கொதிப்பு, மன அழுத்தம் ஏற்படுவதும் கட்டுப்படுத்தப்படுகிறது என்கின்றனர் ஆய்வாளர்கள். 59 வயதுடைய 201 நபர்கள் இருபிரிவாக பிரிக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வில் ஒரு பிரிவினரின் வாழ்க்கை முறையை மாற்றும் உடற்பயிற்சி உணவு வழங்கப்பட்டது.
மற்றொரு பிரிவினருக்கு மது மற்றும் புகை பிடிப்பதை நிறுத்திவிட்டு மெடிடேசன் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டனர். 32 வகுப்புகளுக்குப் பின்னர் அவர்களின் பிஎம்ஐ பரிசோதிக்கப்பட்டது. இருபிரிவினரையும் பரிசோதித்ததில் உடற்பயிற்சி டயட்டில் இருந்தவர்களுக்கு உடல் எடை குறைந்திருந்தது.
தினசரி மெடிடேசன் செய்தவர்களுக்கு மாரடைப்பு, பக்கவாதம் வரும் வாய்ப்பு குறைவாக இருந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர். இந்த ஆய்வினை மேற்கொண்ட ஆய்வாளர், மெடிடேசன் மூலம் உடலும், மனமும் இணைந்து செயலாற்றுகிறது. உடலின் செயல்பாட்டை மனம் கட்டுப்படுத்துகிறது என்று கூறியுள்ளார். எனவே இதயநோயாளிகளுக்கு மெடிடேசன் முறையை மருத்துவர்கள் பரிந்துரைக்கலாம் என்று ஆய்வாளர்க கூறியுள்ளனர். இந்த ஆய்வு முடிவு இதயநோய் மருத்துவ இதழ் ஒன்றில் வெளியிடப்பட்டுள்ளது.

தியானம் மிக சிறந்த வழிமுறை! இறைவனை நினைப்பது , அவனைப் பற்றி நினைவுக் கூறுதல் .  

கருத்துகள்