உடல் எடையை குறைக்க ஆசையா?
உடல் எடையை குறைக்க எண்ணெய், சர்க்கரை சாப்பிடுவதை நிறுத்துங்க!
வேலூரில் உள்ள பிரபல டாக்டர் கீதா மத்தாய், ஆங்கில நாளிதழ் ஒன்றில் கட்டுரை எழுதியுள்ளார். மிக நேர்த்தியாக, அதிக சிரமமில்லாமல் உடல் எடையைக் குறைக்கும் வழியைச் சொல்லியுள்ளார் இவர்.
வயது ஏற ஏற நம் உடல் வளர்சிதை மாற்றத்துக்கு (மெடபாலிசம்) உட்படுகிறது. உடல் வளர்ச்சி பெறும் காலம் முதல் ஒரே முறையிலான உணவு முறைகளை உட்கொண்டு வருவோம். உடல் வளர்ச்சி நற்கும்போது இந்த உணவு முறையை நாம் மாற்றுவதில்லை. வயதாகும்போது உடல் உழைப்பு தானாக குறைகிறது. ஆனால், உணவு முறையில் எந்தவித மாற்மும் இல்லாமல் தொடர்கிறது. இதுவே நம் உடலை கெடுக்கிறது. உடல் உழைப்பு குறையும்போது, "உள்ளே செல்ல வேண்டிய உணவின் கலோரி அளவும் குறைய வேண்டும்" என்கிறார் டாக்டர் கீதா.
ஏழைக் குடும்பப் பின்னணி உள்ளவர்கள் பெரும்பாலும் தங்கள் உடல் உழைப்பை முதலீடாக வைத்தே தங்கள் வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்கின்றனர். இவர்கள் விஷயம் வேறு. போதுமான கலோரி உணவு இவர்களுக்குக் கிடைப்பதில்லை. எனினும், உடல் பருமன் நோயால் இவர்கள் பெரும்பாலும் பாதிக்கப்படுவதில்லை.
நாள் முழுக்க நாற்காலியில் அமர்ந்து வேலை பார்ப்போரிடையே தான் உடல் பருமன் பிரச்னை அதிகம் காணப்படுகிறது. உடல் பருமனைக் குறைக்க பல வழிகளை இவர்கள் நாடுகின்றனர். இதுகுறித்து டாக்டர் கீதா என்ன சொல்கிறார்?
"குடும்பத்தில் ஒருவர் மட்டுமே பருமனாக இருந்தால், அவருக்கென தனி உணவு முறையை வகுத்துக் கொள்வது மிகவும் கடினம். சிரமப்பட்டு மேற்கொண்டாலும், உடல் எடை குறைந்ததும், பழைய உணவு முறையே மேற்கொள்ள வேண்டிய றிர்ப்பந்தம் ஏற்படும். இது எதில்முடியும் தெரியுமா? முன்பிருந்ததை விட "ஓவர் குண்டு" ஆகி விடுவர். பொதுவாக எழுதப்படும் சமச்சீர் உணவு ஆலோசனைகள் எல்லாருக்குமே பொருந்தாது.
இவை உடலின் இயற்கை வளர்சிதை மாற்றத்தில் பெரும் கேடு விளைவித்து விடும்.
"நீராவி குளியல்கள், உடலில் ஒட்டிக் கொண்டால் எடை குறையும் என்று அறிவிக்கப்படும் "பேடு"கள், அதிரும் பெல்டுகள் உடல் எடையைக் குறைக்கும் சுலபமான வழிமுறைகளாக விளம்பரப்படுத்தப்படுகின்றன. ஆனால், இவை எந்த அளவுக்கு பயனுள்ளதாக உள்ளன என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. உண்மையில், சுலபமான கணக்கு முறை மூலம் உடல் எடையை நாம் குறைத்து விடலாம்.
தினமும் 400 கலோரிகள் கொண்ட உணவு முறையுடன், உடற்பயிற்சியும் செய்தால், இரண்டு வாரங்களில் ஒரு கிலோ எடை குறையலாம். ஒரு ஆண்டில் 26 கிலோ குறையலாம். அதாவது, ஒரு கிலோ உணவில், கலோரி அளவு 20 தான் இருக்க வேண்டும். வியர்வை அதிகம் சுரக்கும் உடற்பயிற்சி செய்தால், ஒரு நிமிடத்திற்கு 10 முதல் 12 கலோரிகள் குறையும். நடை பயிற்சியின் மூலம் ஒரு நமிடத்திற்கு 5 முதல் 7 கிலோ குறையும். வீட்டு வேலைகள் செய்தால் ஆறு கலோரிகள் குறையும். யோகா, ஏரோபிக்ஸ் செய்தால் 6 கலோரிகள் குறையும். "டிவி" சீரியல்கள் பார்த்தால் ஒரு நிமிடத்திற்கு ஒரு கலோரி குறையும். இவ்வாறு சொல்கிறார் டாக்டர் கீதா மத்தாய்.
உங்கள் எடையைக் குறைக்க எந்த முறை மிகச் சிறந்தது என்பதைத் தீர்மானித்து, சரியான உணவு முறையைப் பின்பற்றினால் உங்கள் அழகு கூடும் இல்லையா?

கருத்துகள்
கருத்துரையிடுக