நன்னீர் அருந்திடுக ! தண்ணீர் மருந்தரிக!

நன்னீர் அருந்திடுக ! தண்ணீர் மருந்தரிக!

வாட்டர் தெரபி என்றொரு மருந்து இருக்கிறது . அதனால் குணமடையும் வியாதிகள் தெரியுமா ? பட்டியலைப் பாருங்கள்........ தலைவலி , இரத்தக் கொதிப்பு , இரத்த சோகை , மூட்டு வலி , பொது வாதம் , உடல் பருமன் , எலும்பு சம்பந்த வலி , தும்மல் , அலர்ஜி , தலைச்சுற்றல் , இருமல் , ஆஸ்துமா , மார்சளி நோய் , காசநோய் , சிறுநீரகக் கல் , சிறுநீரக நோய் , செரிமான கோளாறு , வாயு , சீத பேதி , மலசிக்கல் , நீரழிவு , கண்ணழற்சி, கண் நோய் , கருப்பைப்  புற்று , மார்பகப் புற்று நோயிகள் .

இத்துணை நோயிகளை கடிக்கும் தீர்த்து வைக்கும் அந்த மருந்தின் விலை அதிகமாக இருக்குமே ? அதுதான் இல்லை. காலணா செலவு இல்லாமல் கிடைக்கும் கை கண்ட மருந்து. பயன் கண்ட பயனாளிகள் பல்லோர் . பரீட்சித்துப் பாருங்கள். அதில் நீங்களும் ஒருவராக இருக்கலாம்.


இந்த தண்ணீர் மருத்துவத்தை -வாட்டர் தெராஃபியை எப்படி செய்வது என்பதனை பார்ப்போம். காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் ஒன்றரை லிட்டர் தண்ணீரை [6 டம்ளர் ] அப்படியே குடிப்பது. இரவில் கொதிக்க வைத்து ஆற வைத்தது . இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது  ஒன்றரை லிட்டர்  தண்ணீர் குடிப்பதற்கு  ஒரு மணி நேரத்துக்கு முன்னும் குடித்த ஒரு மணி நேரத்துக்கு பின்னும் எதுவும் சாப்பிடவோ காபி டீ குடிக்கவோ கூடாது. முந்திய இரவில் தண்ணீர் தவிர வேறு எந்த பானமும் அறிந்திருக்க கூடாது  . ஒரே நேரத்தில் ஒன்றரை  லிட்டர் தண்ணீரையும் குடிப்பது சிரமமாகப் பட்டால், முதலில் 4 டம்ளர் , ஒரு இரண்டு நிமிடம் கழித்து இரண்டு டம்ளர்  தண்ணீர் அருந்தலாம் . பழகிக் கொண்டே வந்தால் நாளடைவில் ஒன்றரை லிட்டர் தண்ணீரையும் ஒரே சமயத்தில்  குடிக்கலாம் .

துவக்கத்தில் தண்ணீர் குடித்து ஒரு மணி நேரத்தில் 2,3 முறை சிறுநீர் கழித்தாலும்- அது போகப் போக சரியாகிவிடும் . இந்த வாட்டர் தெராஃபியை மலச்சிக்கல்  ஒரே நாளிலும், செரிமானக் கோளாறு இருநாளிலும் , நீரழிவு 7 நாளிலும் இரத்த கொதிப்பு 4 வாரத்திலும், காசநோய் 4 வாரத்திலும் , புற்று நோய் 3 மாதத்திலும் சரியாகிவிடும் என்பது இந்த தெராஃபியை செயல்படுத்தியவர்களின் ஏகோபித்த கருத்து.

மூட்டுவலி எலும்பு சம்பந்தமான வலி உள்ளவர்கள் இந்த தண்ணீர் மருத்துவத்தை காலை, மதியம், இரவு இம்மூன்று வேளையும் செய்ய வேண்டும். சிறப்பான முன்னேற்றம் தெரிவதாக இம்முறையை பின்பற்றிய பல்லோரின் கருத்து..

தண்ணீர் அப்படி என்ன உடலியல் மாற்றத்தைக் கொடுத்து வியாதிகளை போக்கப் போகிறது என்று எண்ணலாம். சரியான முறையில் தண்ணீர் அருந்துவதால் மனித உடல் சுத்தமாகிறது . இரைப்பையை  சுத்தப்படுத்தி அதற்கு சுறுசுறுப்பும் , வேகமும் உண்டாக்குகிறது . அதனுள் உள்ள கழிவுப் பொருள்களை வெளிப்படுத்துகிறது. இரைப்பையை மடிப்புகளை அவிழ்த்து அதனை சரி செய்கிறது . பெருங்குடல் சுத்தமாவதால் ஒரு நாளைக்கு தேவையான ஊட்டச்சத்தை மட்டும் நாம் உண்ணும் உணவிலிருந்து எடுத்துக் கொள்கிறது. இதனால் இரத்தம் சுத்தமாகிறது . சுத்தமானால் எல்லாம் சுத்தமாகிவிடும் . இதனை தண்ணீர் செய்கிறது . இதில் இன்னும் தகவல் பெற இன்டர்நெட்டில் கூட பார்க்கலாம். தண்ணீர் ஒரு நல்ல மருந்து, அருந்தி அருந்தி ஆனந்தம் பெறலாம்..

கவனம் .. தயவுசெய்து தண்ணீரை வீண் விரயம் செய்யாதீர்கள்! பெரும்பாலும்  ஊர்களில் தண்ணீர் பஞ்சம் ஏற்படுகிறது. அதை அதை மனதில் வைத்துக் கொண்டு கவனமாக தண்ணீரை செலவு செய்யவும் . தண்ணீரை குடிப்பதற்கு இது பொருந்தாது என்பதை தெளிவுப்படுத்துகிறேன்.  குடிப்பது வேறு ! உபயோக படுத்துவது வேறு!
தண்ணீரின் அருமை பெருமை .. இல்லாத ஊர்களில் கேட்டு பாருங்கள்..
ஆரோக்கியம் செல்வம்...
உண்ணுங்கள் , பருகுங்கள் வீண் விரயம் செய்யாதீர்கள்!
வயிற்றுக்கு மூன்று பகுதி.. ஒரு பகுதி உணவு , இன்னொரு பகுதி தண்ணீருக்கு , மூன்றாவது பகுதி மூச்சு விட ... ஆரோக்கியமாக வாழலாம் ..
இறைவேதம்.. நபிமொழி..

கருத்துகள்