முக்கிய தகவல்கள் அறிய .. ▼

மருத்துவம் சம்மந்தமான தகவல்கள் .இன்னும் பொதுவான தகவல்கள் நீங்கள் இதில் காணலாம்..இஸ்லாமிய கட்டுரைகள் ,இன்னும் பல சுவையான தகவல்களும் உள்ளன.உங்கள் விமர்சனம் வரவேற்க்கபடுகின்றது!

செவ்வாய், 26 செப்டம்பர், 2017

திராட்சையினால் ஏற்படும் நன்மைகள் ...

திராட்சையினால் ஏற்படும் நன்மைகள் ...
உங்கள் ஆரோக்கியத்தில் அலட்சியம் வேண்டாம் ..
ஆரோக்கியம் தான் மிகப் பெரிய செல்வம்... 

செவ்வாய், 8 ஆகஸ்ட், 2017

இரண்டே வாரத்தில் நரை முடிக்கு குட்-பை சொல்லணுமா..?

இரண்டே வாரத்தில் நரை முடிக்கு குட்-பை சொல்லணுமா..?
இந்த நரை முடி தற்போது 30 வயதை எட்டுவதற்குள்ளேயே பலருக்கும் வந்துவிடுகிறது. இதனால் இளமையான வயதிலேயே முதுமைத் தோற்றத்தைப் பெற நேரிடுகிறது.நரை முடியைப் போக்க மார்கெட்டில் ஏராளமான டைகள் விற்கப்படுகின்றன. ஆனால் அவை ஸ்கால்ப்பில் பட்டால், தலைமுடி உதிர்வால் அவஸ்தைப்பட வேண்டியிருக்கும்.எனவே நரைமுடியைப் போக்க இயற்கை வழிகளை நாடுவது தான் சிறந்தது. இங்கு நரைமுடியைப் போக்க நம் முன்னோர்கள் பின்பற்றிய ஓர் எளிய வழி கொடுக்கப்பட்டுள்ளது. அது தான் உருளைக்கிழங்கு நீர். இந்த வழியைப் பின்பற்றினால், 2 வாரத்தில் நரை முடியைப் போக்கலாம். இப்போது அந்த உருளைக்கிழங்கு நீரை எப்படி தயாரிப்பது மற்றும் பயன்படுத்துவது என்று காண்போம்.

வெள்ளி, 4 ஆகஸ்ட், 2017

பூண்டை இப்படி சாப்பிட்டால், இனி வாழ்நாள் முழுதும் மாத்திரை தேவையில்லை

பூண்டை இப்படி சாப்பிட்டால், இனி வாழ்நாள் முழுதும் மாத்திரை தேவையில்லை!
பாதித்துள்ளது. மனம் பாதிப்படையும் போது அதனுடன் சேர்ந்து உடலின் செயல்பாடுகளும் பாதிப்பிற்குள்ளாகின்றன.

மன அழுத்தம் பலவிதமான நோய்களுக்கு காரணமாகிறது. மன அழுத்தம் இருக்கும்போது நாம் என்ன செய்கிறோம் என்றே தெரியாமல் செய்து கொண்டிருப்போம், தன்னிலை மறந்த நிலை உருவாகிவிடும்

இதனை அதிகப்படியானோர் உணர்ந்திருப்போம். இந்த மன அழுத்தத்தை பூண்டை கொண்டு எப்படி நீக்குவது என்பது பற்றி இந்த பகுதியில் காணலாம்.

பசும்பாலை காய்ச்ச வேண்டும். ஒரு டம்ளர் பாலுக்கு பத்து பல் பூண்டுகள் சேர்க்க வேண்டும். பாலில் சிறிது நேரம் பூண்டு வேக வேண்டும். இவ்வாறு வேகும் போது பூண்டில் உள்ள அல்லிஸின் என்ற வேதிப்பொருள், சல்பர் பாலில் கலந்து விடுகிறது. கசப்பு பூண்டின் மருத்துவ குணம் பாலில் இறங்கியதும், இந்த பால் கசக்கும்.

புதன், 14 டிசம்பர், 2016

வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் சீரகம்👍👌

வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் சீரகம்👍👌💃
உலகின் மிகப் பழமையான மணமூட்டிகளில், அதிக செல்வாக்கு நிறைந்தவைகளுள் சீரகம் ரொம்ப முக்கியமானது.


பார்க்கும் போது அவ்வளவு வசீகரம் இல்லாமல் கொஞ்சம் அழுக்காய், அப்படியே சாப்பிட்டால் லேசான கசப்பாய், உலர்வாய் இருக்கும் இந்த சீரகம்.

எப்போது சாப்பிடாலும் சாப்பிட்ட கொஞ்ச நேரத்திற்க்கெல்லாம் வயிறு வீங்கிக் கொள்கிறது; அப்படி ஒன்றும் அதிகமாக சாப்பிடவில்லை அளவாய்த்தான் சாப்பிட்டேன் ஆனாலும் வயிறு இப்படி ஆகிவிட்டது, என வருத்தப்படுபவருக்கு சீரகம் ஒரு அருமையான மருந்து.

ஞாயிறு, 9 அக்டோபர், 2016

கொலஸ்ட்ராலை குறைக்கும் முட்டை

கொலஸ்ட்ராலை குறைக்கும் முட்டை
'முட்டை சைவமா..? அசைவமா?' என்றொரு கேள்வி நீண்ட நாட்களாக நம்மிடையே உண்டு. சிலர் அதை சைவம் என்றும், பலர் அதை அசைவம் என்றும் கூறுகின்றனர். சரி அதை விட்டுவிடுவோம். தினந்தோறும் முட்டைகள் சாப்பிடலாமா?

அமெரிக்காவில் நடந்த ஒரு ஆய்வில், 14 ஆண்டுகள் தினமும் முட்டை சாப்பிடும் பல ஆயிரம் பேர்களைத் தொடர்ந்து கண்காணித்தார்கள். இந்த ஆய்வில் இவர்களுக்கு உடலில் இதய நோய்க்கான அறிகுறியே இல்லை என்பது தெரியவந்தது. சத்துணவான முட்டையில் உள்ள பொருட்கள் இதயநோயைக் குணப்படுத்துகிறது. அதிக அளவு கொலஸ்ட்ரால் இல்லாமல் பார்த்துக் கொள்கிறது. இதனால், முட்டை சாப்பிட்டவர்களுக்கு கொலஸ்ட்ரால் அதிகரிக்கவில்லை.

அமெரிக்காவின் முட்டை சத்துணவு மையமும், ஹார்வார்டு ஸ்கூல் ஆப் பப்ளிக் ஹெல்த்தும் கடந்த 14 ஆண்டுகளாக முட்டை உணவு பற்றி ஆராய்ந்தன. அதில்தான் இந்த உண்மைகள் வெளிவந்தன. முட்டையில் கொலஸ்ட்ரால் இருப்பது உண்மை! ஆனால், அதை அளவுடன் சாப்பிட்டால், இதயத்துக்கு எந்த விதமான கெடுதலையும் செய்யாது என ஆய்வு தெரிவிக்கிறது. "சரிவிகித உணவு தயாரித்து அதன்படி சாப்பிடுகிறவர்கள் தினமும் முட்டையை ஒதுக்க வேண்டாம். முட்டையில் தீய கொலஸ்டிராலுடன் நல்ல கொலஸ்ட்ரால் அளவும், டிரைகிளி செர்டைஸின் அளவும் இதே அளவு சக்தி வாய்ந்த தரத்துடன் இருக்கின்றன. எனவே, தீய கொலஸ்ட்ரால் ரத்தத்தில் சேராது. இத்துடன் இதயத்துக்குப் பாதுகாப்பான போலிக் அமிலம் மற்றும் 'பி' குரூப் வைட்டமின்களும், நச்சு முறிவு மருந்துகளும், கொழுப்புச் செறிவில்லாத கொழுப்புகளும் முட்டையில் உள்ளன" என்கிறார் டாக்டர் டெனால்ட் மெக்மைரா.

சனி, 8 அக்டோபர், 2016

ஊறுகாய் இதயத்துக்கு டேஞ்சர்!

ஊறுகாய் இதயத்துக்கு டேஞ்சர்!
ஹார்ட் அட்டாக் கேள்விப்படும்போது பயங்கரமா தான் இருக்கும். ஹார்ட் அட்டாக் வந்துட்டதால, அதோட எல்லாமே முடிஞ்சு போச்சுன்னு நினைச்சு, வாழ்க்கையை வெறுக்க வேண்டியதில்லை. ரெண்டு, மூணு முறை அட்டாக் வந்து பிழைச்சு, நிறைய காலம் ஆரோக்கியமா வாழறவங்களும் இருக்காங்க. வந்ததை நினைச்சு பயப்படாம, அடுத்து எப்படி இருக்கணும், அதுக்கு என்ன சாப்பிடணும், எப்படி சாப்பிடணும்னு தெரிஞ்சுக்க வேண்டியது அவசியம்.

இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் யாருக்கெல்லாம் வர வாய்ப்பு அதிகம்?

நீரிழிவு உள்ளவங்க, சிறுநீரகக் கோளாறு உள்ளவங்க, சிகரெட் பழக்கமுள்ளவங்க, உடல் பருமனானவங்க, மொனோபாஸ் கடந்தவங்க, எப்போதும் டென்ஷனா இருக்கிறவங்க, எந்த வேலையும் செய்யாம உடல் இயக்கமே இல்லாதவங்க, ஏற்கனவே குடும்பத்துல யாருக்காவது இதய நோய்கள் இருக்கிறவங்க... இவங்க எல்லாம் ஜாக்கிரதையா இருக்கிறது நல்லது.