செவ்வாய், 12 மே, 2015

ஹோட்டல்ல சாப்பிடுறீங்களா....!

எச்சரிக்கை !

------------------------------------------------
நம்ம ஊர் ஹோட்டல்களில் எப்படி எல்லாம் டுபாக்கூர் வேலை நடக்குது என்று அந்தக் கடைக்காரர்களிடமே போட்டு வாங்கிய தகவல்கள்...!!

இட்லி:
-----------
பொதுவா இட்லி மெத்துனு இருக்கணும்னா, ஒரு டம்ளர் இட்லி அரிசிக்கு கால் டம்ளர் உளுந்து தேவை. இரண்டையும் தனித்தனியா ஊறவெச்சு, தனித் தனியா தான் அரைக்கணும். அஞ்சு மணி நேரம் புளிக்கவெச்சு, சுட்டீங்கன்னா பஞ்சு மாதிரி இட்லி தயார். ஆனா, என்ன நடக்குது இங்க? கடை இட்லி அரிசி கால் பங்கு, ரேசன் அரிசி முக்கால் பங்கு, உளுந்து கால் பங்கு, ஜவ்வரிசி முக்கால் பங்கு, நைட்டு ஊறவெச்ச பழைய சாதம் கொஞ்சம், சோடா உப்பு எக்கச்சக்கமா... எல்லாத்தையும் அரைச்சு, மூணு மணி நேரம் வெயில்ல வெச்சுட்டு எடுத்து சுட்டால், கும்முன்னு குஷ்பு இட்லி தயார். அந்த இட்லியும் மீந்துருச்சின்னா, அப்பவும் பிரச்னை இல்லை. அடுத்த நாள் அரைக்கிற மாவுல மீந்துபோன இட்லியைப் போட்டு அரைச்சிடுவாங்க!

வியாழன், 7 மே, 2015

இரைப்பை கேன்சர் தடுப்பது எப்படி?

இரைப்பை கேன்சர் தடுப்பது எப்படி?

முறையான உணவு முறை இன்றி வாய்க்கு பிடித்ததை எல்லாம் சாப்பிடுதல், பரபரப்பான வாழ்க்கை முறையால் ஏற்படும் டென்ஷன் போன்ற பல காரணங்கள் இரைப்பை கேன்சரை உருவாக்குகிறது. அல்சர், வயிற்றுப் பகுதியில் உள்ள உறுப்புகளின் பாதிப்பு, புகைபிடித்தல், மது போன்ற பழக்கங்களால் 30 வயதிலேயே இரைப்பை கேன்சர் வர வாய்ப்புள்ளது என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இரைப்பை கேன்சர் வராமல் தடுப்பது குறித்து வயிறு மற்றும் குடல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சரவணன் விளக்கம் அளிக்கிறார். இரைப்பை கேன்சர் அதிகளவில் ஆண்களையே தாக்குகிறது. இப்போது 30 வயது முதல் 35 வயதுக்குள் இந்த நோயின் தாக்கம் அதிகம் உள்ளது.

ஞாயிறு, 3 மே, 2015

ஆரோக்கியமாக வாழ்வதற்குத் தேவையான 52 வழிகள்


ஆரோக்கியமாக வாழ்வதற்குத் தேவையான 52 வழிகள்


நோய்கள் எதுவும் தீண்டாமல் ஆரோக்கியமாக வாழ்வதற்குத் தேவையான 52 வழிகள்
இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. அது ஏன் 52 வழிகள்?

இந்த வழிகளை எல்லாம் ஒரே நேரத்தில் கடைப்பிடிப்பது சிரமமாக இருக்கும்
என்று நினைப்பவர்கள் வாரத்திற்கு ஒரு வழி என்று பழக்கப்படுத்திக்
கொண்டால் போதும், ஒரு வருடத்தில் இவை எல்லாமே அத்துப்படி ஆகிவிடும்.
‘அப்புறம், உங்கள் உடலுக்கும் மனதுக்கும் 100% கியாரண்டி!’ என்கிறார்
பாதை வகுத்துத் தந்த ரேகா ஷெட்டி. இனி அந்த வழிகளைப் பின்பற்றி நடப்போமே!

சிறுநீரகக் கற்கள். சிறுநீர்க்கல் நோய். நோயின் அறிகுறிகள்.


சிறுநீரகக் கற்கள். சிறுநீர்க்கல் நோய். நோயின் அறிகுறிகள்.


நீரில் கரையக்கூடிய கூழ்நிலைத் தன்மையற்ற திண்மப் பொருட்களை
வெளியேற்றுவது சிறுநீரகங்களின் முதன்மையான வேலையாகும். இவை வெளியேற்றும்
திண்மப் பொருள்கள் மனித உடலுக்குத் தேவையற்றதாகவோ வேண்டிய அளவிற்கு
அதிகமானதாகவோ இரத்தத்தில் கலந்திருக்கும். இத்தகைய பொருள்களை அவ்வப்போது
இரத்தத்திலிருந்து நீருடன் வெளியேற்றி, சிறுநீரகங்கள் உடலில்
கீழ்க்கண்டவற்றை நிலைப்படுத்துகின்றன.

வெள்ளி, 1 மே, 2015

கொலஸ்டரோல் சிகிச்சையில் புதிய அணுகு முறைகள்


கொலஸ்டரோல் சிகிச்சையில் புதிய அணுகு முறைகள்
"பாருங்கோ டொக்டர் என்ரை கொலஸ்டலோல் அளவு எவ்வளவு குறைஞ்சு போட்டுதெண்டு.
ஆனால் குளிசையின் அளவைக் குறைக்கவோ நிப்பாட்டவோ வேண்டாம் என்று
ஸ்பெசலிஸ்ட் சொல்லுறார்" ரிப்போட்டை நீட்டியபடி சொன்னார்.

நான் அவரது கேள்விக்கு நேரடி மறுமொழி சொல்லவில்லை. எதிர்க் கேள்வி கேட்டேன்.