செவ்வாய், 24 மே, 2016

ஒரு வேளை மருந்தில் குணமான அதிசயம்.

 ஒரு வேளை மருந்தில் குணமான அதிசயம்.
*******   ******   *****  *****
நமது தமிழ்நாட்டு பாரம்பரிய மருத்துவத்தின் பெருமையை நான் அனுபவ பூர்வமாக உணர்ந்த நிகழ்வு இது.

உங்களுக்கு,உங்கள் நண்பர்களுக்கோ
இது அவசியம் பயன் படும்.

சென்ற ஆண்டு எனது மகன் பள்ளி இறுதிப் படிப்பிற்காணத் தேர்வை நெருங்கிக் கொண்டிருந்த நேரம்.

ஒரு நாள் கடுமையான சுரம் வந்தது.
அது சாதாரண சளி சுரமாக இருக்கும் என சிகிச்சை தந்தேன்.
ஆனால் சுரம் விடாமல் இரண்டு நாள் நீடித்தது.தொடர் சிகிச்சை தந்ததில் சுரம் விட்டு விட்டது.

வியாழன், 19 மே, 2016

இயற்கையோடு இணைந்திடுங்கள்:


இயற்கையோடு இணைந்திடுங்கள்:
சீனாவில் உள்ள மக்கள் 400 வகையான காய்கறிகளை சமைத்து உண்கிறார்கள். மேலும், இயற்கையோடு இயைந்த விளைச்சலில் காய்கறிகளை அறுவடை செய்து உண்கிறார்கள். இதனால் அவர்களது ஆயுள் காலம் அதிகரிக்கிறது. சரி, நாம் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறிகளின் பயன்களும் , பக்க விளைவுகளும் பற்றி இங்கே காணலாம்..!

* கத்தரிக்காயில் பல வண்ணங்கள் உண்டு என்றாலும் அனைத்திலும் உள்ள சத்து ஒன்றேதான். பிஞ்சு கத்தரிக்காய் சமைப்பதற்கு நல்லது. முற்றின கத்தரிக்காய் அதிகம் சாப்பிட்டால் சொறி சிரங்கைக் கொண்டு வரும்.

* இதில் தசைக்கும், இரத்தத்திற்கும் உரம் தருகிற வைட்டமின்கள் சிறிதளவு உள்ளன. இதனால் வாய்வு, பித்தம், கபம் போகும். அதனால் தான் பத்தியத்துக்கும் இக்காயைப் பயன்படுத்தச் சொல்கிறார்கள். அம்மை நோயால் பாதிக்கப்படுபவர்கள் இதை உண்டு நல்ல பயன் பெறலாம்.

திங்கள், 9 மே, 2016

இரத்த வாந்தி ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?


இரத்த வாந்தி ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?
வயிற்றில் உருவான அல்சர் நோயால் ஏற்பட்ட இரத்தக்கசிவு காரணமாக இரத்த வாந்தி ஏற்படுகிறது. வயிற்றில் இரத்தக்கசிவு அதிகமாக இருக்கும்போது திடீரென வயிற்றில் சுருக்கம் ஏற்பட்டால் நோயாளி இரத்தவாந்தி எடுப்பார். இவ்வகையிலான இரத்தப்போக்கு ஒரு லிட்டர் அல்லது  அதற்கு மேலும் இருக்கலாம்.

வலிப்பு வந்தால் இரும்பு பொருட்களை கொடுப்பது மூட நம்பிக்கை



மூளையில் உள்ள நரம்பு செல்கள் உட்பட உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம் நரம்பு செல்கள் தேவையற்ற மற்றும் அளவுக்கு அதிகமான மின்னணு தன்மையை வெளிப்படுத்தும் விளைவே வலிப்பு நோயாக பாதிப்பு ஏற்படுத்துகிறது. மூளை பகுதிகளில் விபத்து, நோய், அறுவை சிகிச்சை போன்றவற்றால் தழும்புகள் ஏற்பட்டு இருந்தாலோ, ரத்த கசிவு, தொற்று, மூளையில் பூச்சிகட்டி, மூளை காய்ச்சல் போன்றவற்றால் இந்த வலிப்பு நோய் ஏற்படுகிறது.