வியாழன், 2 ஜூன், 2016

பொதுவான மருத்துவ தகவல்கள் [கீரை வகைகள்]

பொதுவான மருத்துவ தகவல்கள் [கீரை வகைகள்]
கீரைகளில் நம் உடலுக்குத் தேவையான சக்தியை அதிகரிக்கும் வைட்டமீன்கள் அதிகம். சத்து அதிகம் மிக்க சில கீரை வகைகளைப் பார்ப்போம்.

அகத்திக்கீரை:

அகத்திக்கீரை ஜீரண சக்தியைத்தரும். மலச்சிக்கலைப் போக்கும். அரிசி களைந்த தண்ணீரில் சின்ன வெங்காயம், சீரகப்பொடி, தேவையான அளவு உப்புடன் அகத்திக் கீரையை சேர்த்து வேக வைத்துச் சாப்பிடலாம். அகத்திக்கீரையுடன் தேவையான அளவு உப்பு, வர மிளகாய், அரிந்த வெங்காயம் சேர்த்து பொரியல் செய்தும் சாப்பிடலாம்.

தாய்ப்பாலுக்கு இணையானது ஆரஞ்சு....

தாய்ப்பாலுக்கு இணையானது ஆரஞ்சு....

தாய்ப்பால் தரமுடியாத தாய்மார்கள் தங்களின் பிரதிநிதியாக குழந்தைகளுக்கு இந்தச் சாறைத் தரலாம். இப்பழம், இதயவலி, மார்புவலிக்கு மிகச் சிறந்த மருந்தாகும். இரத்தக்குழாய்களின் அடைப்பை நீக்கி ரத்தத்தைக் கொண்டு செல்ல இது உதவுகிறது, ஒரு ஆரஞ்சுப்பழம் மூன்று கப் பாலுக்கு இணையானது. நல்ல தூக்கத்தை இது வரவழைக்கிறது. தினமும் இதைச் சாப்பிட நீண்ட ஆயுள் உறுதியாகும்.

நல்ல பசி எடுக்க...

நல்ல பசி எடுக்க...
ஒரு கைபிடி கருவேப்பிலையை எடுத்து மைபோல் அரைத்து ஒரு டம்ளர் நீரில் கலக்கி வெறும் வயிற்றில் தினமும் குடித்துவர நல்ல பசி எடுக்கும்.

விளக்கெண்ணையையும், சுண்ணாம்பையும் சேர்ந்து குழப்பி இரும்பு கரண்டியிலிட்டு அடுப்பில் காயச்சி மிதமான சூட்டில் வெளிப்புறம் தடவினால் தொண்டை வலி, தொண்டைக்கட்டு நீங்கும்.