சனி, 17 செப்டம்பர், 2016

நன்னீர் அருந்திடுக ! தண்ணீர் மருந்தரிக!

நன்னீர் அருந்திடுக ! தண்ணீர் மருந்தரிக!

வாட்டர் தெரபி என்றொரு மருந்து இருக்கிறது . அதனால் குணமடையும் வியாதிகள் தெரியுமா ? பட்டியலைப் பாருங்கள்........ தலைவலி , இரத்தக் கொதிப்பு , இரத்த சோகை , மூட்டு வலி , பொது வாதம் , உடல் பருமன் , எலும்பு சம்பந்த வலி , தும்மல் , அலர்ஜி , தலைச்சுற்றல் , இருமல் , ஆஸ்துமா , மார்சளி நோய் , காசநோய் , சிறுநீரகக் கல் , சிறுநீரக நோய் , செரிமான கோளாறு , வாயு , சீத பேதி , மலசிக்கல் , நீரழிவு , கண்ணழற்சி, கண் நோய் , கருப்பைப்  புற்று , மார்பகப் புற்று நோயிகள் .

இத்துணை நோயிகளை கடிக்கும் தீர்த்து வைக்கும் அந்த மருந்தின் விலை அதிகமாக இருக்குமே ? அதுதான் இல்லை. காலணா செலவு இல்லாமல் கிடைக்கும் கை கண்ட மருந்து. பயன் கண்ட பயனாளிகள் பல்லோர் . பரீட்சித்துப் பாருங்கள். அதில் நீங்களும் ஒருவராக இருக்கலாம்.

வியாழன், 15 செப்டம்பர், 2016

மூட்டு வலி ஏற்பட காரணங்கள் :

மூட்டு வலி ஏற்பட காரணங்கள் :

♡ மூட்டு என்பது நமது முழங்கால்களில் இருப்பது மட்டும் இல்லை. தோள்பட்டைஇ முழங்கைஇ கழுத்துஇ இடுப்பு போன்ற அனைத்துமே மூட்டு வகைகள் தான். மூட்டு வலிக்கு முக்கியமான காரணம் நரம்பு அழுத்தம் அல்லது நரம்பு தூண்டல் தான் காரணமாக உள்ளது.

♡ வயிறு நிறைய உண்பது.

♡ தவறான உணவுப்பழக்க வழக்கம்.

♡ அதிக அளவு எண்ணெய் உணவுப் பொருட்களைச் சாப்பிடுதல்.

♡ அதிகளவு உப்பு சேர்த்துக் கொள்ளுதல்.

♡ தொடர்சியான தூக்கமில்லாதிருத்தல்.

♡ அதிக மனஅழுத்தம்.

♡ அளவுக்கு அதிகமான கோபம்.

♡ அதிக உடல் எடை.

♡ மதுஇ புகைஇ போதைப் பொருட்கள் உட்கொள்ளுதல்.

♡ வாயுத் தொல்லை உணடாக்கும் உணவுகளை அதிகமாக சாப்பிடுதல்.

♡ அதிக சக்கரை சேர்த்த இனிப்புகள்இ பானங்கள் குடித்தல்.

♡ கால்சியம் சத்து குறைவாக இருத்தல்.

♡ உடல் உழைப்பு இல்லாமை.

♡ மூட்டு தேய்மானம்.

♡ இள வயதில் உடற்பயிற்சி செய்யாமை.

♡ மூட்டுவலி வராமல் தடுக்கும் முறைகள்.

♡ அதிக பழுதூக்குதலைத் தவிர்க்க வேண்டும்.

♡ கால் முட்டியினை முடிந்தவரை உயரமாக தூக்குவதனால் வீக்கங்களை குறைக்கலாம்.

ஞாயிறு, 4 செப்டம்பர், 2016

இடுப்பு வலி ஏற்படக் காரணங்கள் 

இடுப்பு வலி ஏற்படக் காரணங்கள் 


♡ அதிகமான நேரம் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு இடுப்பு வலி ஏற்படும். ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்தால் முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்டுஇ இடுப்புவலியால் அவதிப்படுவர். காரணம் இடைவிடாமல் உட்கார்ந்து கொண்டே அமர்ந்திருப்பதுதான்.

♡ இருக்கையில் நேராக சரியான நிலையில் உட்காராமல் இருப்பது.

♡ முறையற்ற உடற்பயிற்சி.

♡ நீண்ட நேரம் அமர்ந்து பிரயாணம் செய்யும் போது இடுப்பு வலி ஏற்படும் ஆபத்து அதிகம் உள்ளது.

♡ எலும்புகளில் ஏற்படும் சுண்ணாம்புக் குறைவு.

♡ சரியாக குணப்படுத்தப் படாத வாயுக் கோளாறு.

♡ நீண்ட நேரம் ஒரே நிலையில் நின்றபடி வேலை செய்வதால் இடுப்பு வலி வருகிறது.

சனி, 3 செப்டம்பர், 2016

கோடை காலம் - நோய்கள்

கோடை காலம் - நோய்கள்


பூஞ்சை தொற்று :

✤ உடலில்இ ஈரமுள்ள பகுதிகளில் பூஞ்சைக் கிருமிகள் எளிதில் தொற்றிக்கொள்ளும். குறிப்பாகஇ வியர்க்குருவில் இத்தொற்றும் சேர்ந்துகொண்டால் அரிப்புடன் கூடிய படைஇ தேமல் தோன்றும்.

தடுக்கும் வழிமுறைகள் :

❤ இந்த நோயை தடுக்க படையைக் குணப்படுத்தும் களிம்பு அல்லது பவுடரைத் தடவி வர இது குணமாகும். உள்ளாடைகளைச் சுத்தமாக வைத்துக்கொண்டால் பூஞ்சை படை வருவது தடுக்கப்படும்.

நீர்க்கடுப்பு :

✤ கோடையில் சிறுநீர்க் கடுப்பு அதிகத் தொல்லை தரும். அளவுக்கு மீறி வியர்வை வெளியேறுதல் மற்றும் தேவையான அளவு தண்ணீர் குடிக்காதது இதற்கு முக்கியக் காரணம் ஆகும்.

தடுக்கும் வழிமுறைகள் :

❤ உட்கொள்ளும் தண்ணீரின் அளவு குறையும்போது சிறுநீரின் அளவும் குறைந்துவிடும். இதனால்இ சிறுநீரின் மூலம் வெளியேற வேண்டிய உப்புகள் கடினமாகிஇ சிறுநீர்ப் பாதையில் படிகங்களாகப் படிந்துவிடும். இதன் விளைவுதான் நீர்க்கடுப்பு. நிறையத் தண்ணீர் குடித்தால் இந்தப் பிரச்சினை சரியாகிவிடும்.