திங்கள், 14 செப்டம்பர், 2015

பாட்டி வைத்தியம் [சில குறிப்புகள்]

ஆரோக்கியமான உணவுகள் போனது!
ஆபத்தான உணவுகள் வந்தது!
ஆரோக்கியம் உங்கள் கையில்!!
பாட்டி வைத்தியம் [சில குறிப்புகள்]
கொண்டைக்கடலையில் புரதம், கலோரி, நார்ச்சத்து, மாவுச்சத்து போன்றவை காணப்படுகிறது.
மேலும் பாஸ்பரஸ், இரும்பு, கால்சியம், மெக்னீசியம், சோடியம், பொட்டாசியம்,
துத்தநாகம், தாமிரம் ஆகியவை அதிக அளவில் நிறைந்துள்ளன. உடலில் இருக்கும்
கொழுப்பை குறைக்க முளைக்கட்டிய கொண்டைக்கடலையில்
இருக்கும் ஹார்மோன் பெரிதும் உதவுகிறது. நீரிழிவு இருப்பவர்கள்
சாப்பிட கூடிய உணவு. கொழுப்பு மிக குறைந்த அளவே காணப்படுகிறது.
குறிப்பாக வெள்ளை கொண்டைக்கடலையை விட
கருப்பு கொண்டைக்கடலையில் அதிக அளவில் நார்ச்சத்து காணப்படுகிறது.