செவ்வாய், 9 ஆகஸ்ட், 2016

பல்லை பாதுகாக்க சில டிப்ஸ்கள் !

பல்லை பாதுகாக்க சில டிப்ஸ்கள் !சிறு வயதில் இருந்தே பல்லை ஆரோக்யமாக வைப்பதில் கவனம் செலுத்த வேண்டும். பிரச்னை வந்து, வலிக்க ஆரம்பித்த பின்னர் தான் மருத்துவரைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணமே பலருக்கும் உள்ளது. குழந்தைகளுக்கு பல் முளைக்க ஆரம்பித்ததில் இருந்தே தினமும் இருமுறை பல்துலக்க வேண்டும். பல்லின் இடுக்குகளில் உணவுப் பொருள்கள் படியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு சிக்கிக் கொண்டால் வாய் கொப்பளித்து உடனடியாக பல்லை சுத்தம் செய்ய வேண்டும்.

சத்துக் குறைபாடான உணவுகள் மற்றும் உடலில் ஏற்படும் சர்க்கரை உள்ளிட்ட மற்ற நோய்களின் காரணமாகவும் பல் ஆரோக்யம் விரைவில் கெட்டுவிட வாய்ப்புள்ளது. எச்சிலில் உள்ள ஏசிட் மற்றும் உணவில் உள்ள கார்போஹைட்ரேட்டும் சேர்ந்து பல்லில் சொத்தையை உருவாக்குகிறது. பல் சொத்தை பெரிதாக வளர்ந்து பல்லின் வேரை தாக்கும் போது தான் வலி ஏற்படுகிறது. இந்த வலியை கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டால் பல்லின் வேர்ப்பகுதி முழுவதும் பாதிக்கப்பட்டு பல்லை முழுமையாக இழக்கும் நிலை ஏற்படும்.

அம்மை, பரு தழும்புகளால் பிரச்சினையா?

அம்மை, பரு தழும்புகளால் பிரச்சினையா?
கோடைகாலத்தில் பெரும்பாலோனோரை பாதிக்கும் நோய் அம்மை. சின்னம்மை என்றால் பெரும்பாலும் தழும்புகள் ஏற்பட வாய்ப்பில்லை. அதேசமயம் பெரிய அம்மை ஏற்பட்டு கொப்புளங்கள் பெரிதானால் அவை குணமான பின்னரும் வடுக்களாக மாறிவிடும். சருமத்தின் மறைவான இடங்களில் வடு இருந்தால் பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை. அதே முகத்தில் தழும்புகள் இருந்தால் முகத்தின் அழகையே மாற்றி அமைத்து ஒருவித தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்திவிடும். எனவே அம்மைத் தழும்புகள் ஏற்பட்டவர்கள் இயற்கையாக கிடைக்கும் பொருட்களைப் பயன்படுத்தி இழந்த அழகை திரும்பவும் பெற முடியும்.